தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வருடம் வருடம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி எட்டு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கும், பலரின் வாழ்க்கையையும் துணையாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.

முதல் ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பின் கடந்த எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இவரின் பேச்சும் கருத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், முதல் சீசனில் ஓவியா டைட்டில் பெற்றிருந்தார். இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசன் ராஜி, ஆறாவது சீசனில் அசிம், ஏழாவது ராஜி, அர்ச்சனா, கடைசியாக எட்டாவது சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகியிருந்தார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி:
கடந்த எட்டாவது சீசனில் பிக் பாஸ்-சுமால் பாஸ் என்று இரண்டாக பிரித்து வித்தியாசமாக நடத்தி இருந்தார்கள். இதை அடுத்து கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து அப்டேட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சியை அக்டோபர் முதல் வாரத்திலேயே தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சி தொடர்பாக புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு இருந்தது.
https://www.youtube.com/watch?v=3RrNtTKY760
நிகழ்ச்சி குறித்த தகவல்:
அதில் விஜய் சேதுபதி இடம் பெற்றிருந்தார். விரைவில் டீசரும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பட்டியல்கள் சோசியல் மீடியாவில் வெளியான வண்ணம் இருக்கிறது. அதில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் கொடுக்கும் மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியாவின் பெயரும் இடம் பெற்று இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக லட்சுமி பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.
View this post on Instagram
லட்சுமி பிரியா பதிவு:
அதில் அவர், நான் பிக் பாஸ் 9 நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக சோசியல் மீடியாவில் பலரும் தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இதுவரையில் நான் எந்த ஒரு அதிகார பூர்வ ஆடிஷனிலும் கலந்து கொள்ளவில்லை. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அப்படி எதுவாக இருந்தாலும் நான் உங்களிடம் உறுதியான பின் சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் பலருமே தங்களுடைய கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.






