பிராமின் வீட்லலாம் அப்படி நடக்கவே நடக்காது, ஆனா இப்போ எல்லாம் கல்யாணத்துல இப்படி பண்ணுதுங்க – லட்சுமியின் பேச்சால் சர்ச்சை

0
2539
- Advertisement -

கலாச்சாரம் குறித்து நடிகர் லட்சுமி பேசியதற்கு நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லட்சுமி. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். லட்சுமியின் தந்தை மற்றும் தாய் இருவருமே சினிமா துறையில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தான் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். முதலில் நடிகை லட்சுமி நடித்த படம் ஜீவனாம்சம். இந்த படம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது.அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். 70 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

- Advertisement -

நடிகை லட்சுமி திரைப்பயணம்:

தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு உட்பட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை லட்சுமி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கலாச்சாரம் குறித்து கூறியிருந்தது, இப்போதெல்லாம் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளில் சிறு பிள்ளைகள் முதல், கிழவிகள் வரை நடனமாடுகிறார்கள்.

கலாச்சாரம் குறித்து சொன்னது:

சமீபத்தில் கூட என்னுடைய உறவினர் ஒருவரின் திருமண விழாவில் மாப்பிள்ளை வீட்டு சைடு நாங்கள் எல்லோரும் அமைதியாக இருந்தோம். ஆனால், பெண் வீட்டு சைடில் பாட்டி முதல் சிறிய பிள்ளைகள் வரை பயங்கரமாக குத்தாட்டம் போட்டு இருக்கிறார்கள். கலாச்சாரம் எங்கு செல்கின்றது என்று தெரியவில்லை? இப்படி எல்லாம் நிகழ்ச்சிகளில் பண்ணுவதா? காலம் மாறினால் அதற்கு கலாச்சாரமும் மாறணுமா? என்றெல்லாம் லட்சுமி பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

கேலி, கிண்டல் செய்து வரும் நெட்டிசன்கள்:

இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோவை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பகிர்ந்து ஜீன்ஸ் படத்தில் வெளிநாட்டில் கிழவி ஆடின ஆட்டமா? இதில் கலாச்சாரத்தை பற்றி நீங்கள் பேசுவதா? கலாச்சாரத்தை பற்றி யோசிப்பவர்களாக இருந்தால், நீங்கள் ஏன் படத்தில் நடிக்க வந்திர்கள்? என்று கூறி அவர் படங்களில் நடித்த ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு, லட்சுமி மாமி ரொமான்ஸ் சீன் வேணுமா? என்றெல்லாம் கேலி கிண்டல் செய்து வருகிறார்கள்

Advertisement