இன்று 42வது பிறந்தநாளை கொண்டாடும் மாளவிகா, 18 வயதில் நடித்த முதல் படத்தின் புகைப்படம். அதுவும் இந்த மாஸ் நடிகருடன்.

By Rajkumar · 19/7/2021

தமிழ் சினிமாவில் 90ஸ் லகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த மாளவிகா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நடிகை மாளவியா அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான 'உன்னை கொடு என்னை தருவேன்' என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். .அந்த படத்திற்கு கதாநாயகியாக மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற படத்திலும் நடித்தார். அறிமுகமான சில காலத்திலேயே அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்த நடிகை என்ற பெருமையை பெற்ற நடிகைகளில் இவரும் ஒருவர்.

இதனால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அஜித்துடன் நடித்த பின்னர் ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என்று பல்வேறு படங்களில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த மாளவிகா கடந்த 2005 ஆண்டு 'சி யூ அட் நைட்' என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : தன் கணவரை Pubg மதனுடன் ஒப்பிட்ட ரசிகர் - அனிதா சம்பத்தின் ரியாக்ஷனை பாருங்க.

அந்த படம் தான் இவரது சினிமா வாழ்க்கைக்கு ஆப்படித்து துரத்தி விட்டது.அந்த படத்தில் நடித்ததற்கு பின்னர் பட வாய்ப்புகள் குறைந்து போகவே ஒரு சில படங்களில் துணை நடிகையாகும் ஐட்டம் டான்ஸராகவும் ஆட்டம் போட்டார் அம்மணி. பின்னர் அந்த வாய்ப்புகளும் சரியாக அமையாமல் போக கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்தார் திருமணத்திற்கு கடைசியாக 2009 ஆம் ஆண்டு ஆயுதம் செய்வோம் என்ற படத்திலும் 2009ஆம் ஆண்டு ஆறுபடை என்ற படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை மாளவிகா, தனது 18 வயதில் நடித்த முதல் படத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அது அஜித்துடன் நடித்த உன்னை தேடி திரைப்படமாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full