தன் கணவரை Pubg மதனுடன் ஒப்பிட்ட ரசிகர் – அனிதா சம்பத்தின் ரியாக்ஷனை பாருங்க.

0
3629
anitha

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார்.மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

இதையும் பாருங்க : சுந்தரா ட்ராவல்ஸ் படத்தின் இரண்டாம் பக்கத்தில் இந்த 2 காமெடி நடிகர்களா ? (நல்ல படத்த கெடுக்காம இருந்தா சரி)

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை தனது கணவர் பற்றி பக்கம் பக்கமாக பேசி இருந்தார் அனிதா சமபத். அதே போல தனது கணவர் பெயரை சொன்னதால் ‘என் புருஷன் பேர சொல்லாதீங்க ஆரி’ என்று உதட்டை கடித்து எச்சரித்தார் அனிதா. அந்த அளவிற்கு தனது கணவர் மீது மிகுந்து அன்பு கொண்டவர் அனிதா. சமீபத்தில் தனது கணவரின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு ரசிகர் ஒருவர், இவர பாத்தா pubg மதன் மாதிரி இருக்காரு என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த அனிதா, என்னென்ன சொல்றான் பாருங்க என்று சிரித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், முகநூல் பக்கம் ஒன்றில் அனிதா தனது கணவரை விவாகரத்து செய்கிறாரா ? உண்மை இது தான் என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியானது. இதனை பகிர்ந்த அனிதா, கண்டன்ட் இல்லனு இந்த அளவிற்கு இறங்கிட்டாங்க கிசுகிசு பக்கங்கள். தினமும் யூடுயூப்ல வீடியோ போட்றத எல்லாம் அட்மின் பாக்கறதில்ல போல என்று என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement