உங்களால NNN விரதமே கலைஞ்சிடிச்சி - மாளவிகாவின் ஆதிகால லுக் போட்டோ ஷூட்டால் புலம்பிய ரசிகர்கள்.

By Rajkumar · 7/11/2021

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் என்று பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.

பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை கண்ட பின்னர் தான் அம்மணி இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா. ஆனால், சமூக வலைதளத்தில் இவரது கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது. இறுதியாக மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ஆதிகால பெண்ணை போல ஜாக்கெட் அணியமால் வெறும் புடவையை அணிந்து போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் உங்களால் NNN விரதமே கலைஞ்சிடிச்சு என்று புலம்பி வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full