இப்பவும் நீங்க அழுகு தான், ஆனா உங்க தொழில்க்கு கொஞ்சம் ஒல்லி ஆகுங்க – விஷ்ணு விஷால் பட விழாவில் மஞ்சுமாவை கண்டு ரசிகர்கள் ஷாக்.

0
1174
manjima
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் மஞ்சிமா மோகன். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 90 காலகட்டத்தில் இறுதியில் 2000 தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கதாநாயகியாக வலம் வருகிறார். 1998 ஆம் ஆண்டு தான் இவர் சினிமா உலகிற்குள் நுழைந்தார். அதுவும் இவர் முதன் முதலாக மலையாள மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பின் சிறிய இடைவேளை எடுத்து கொண்டு 2016ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்து இருந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தேவராட்டம், முடிசூடா மன்னன் என சில படங்களில் நடித்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். பிறகு சிறிது காலம் மஞ்சுமா மோகன் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதற்கு காரணம் இவருக்கு ஏற்பட்ட விபத்து தான். இவருக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது. இதற்காக இவர் தீவிர சிகிச்சை பெற்று இருந்தார் .

- Advertisement -

மஞ்சுமா மோகனுக்கு ஏற்பட்ட விபத்து:

அதற்குப் பிறகு இவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டு ட்ரீட்மென்ட் செய்து கொண்டிருந்தார். இதனால் இவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டார். அதனால் இவருடைய உடல் எடை கொஞ்சம் வெயிட் போட்டு விட்டது என்றே சொல்லலாம். இருந்தாலும் மஞ்சுமா மோகன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், இவருடைய உடல் எடையை குறித்து பலரும் ட்ரோல் செய்து வந்திருந்தார்கள். இதனால் மஞ்சுமா மோகன் பெரிய மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதில் இருந்து மீண்டு வந்ததாகவும் பேட்டியில் கூறி இருந்தார்.

எப்.ஐ.ஆர். படம் பற்றிய தகவல்:

தற்போது மஞ்சுமா மோகன் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது மஞ்சுமா மோகன் எப்.ஐ.ஆர். என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

எப்.ஐ.ஆர். படம் டிரைலர் லான்ச்:

மேலும், இந்த படம் பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது நாடு முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் திரையரங்களில் இந்த படம் வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எப்.ஐ.ஆர். படத்தின் டிரைலர் லான்ச் சமீபத்தில் நடந்தது. இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், விஷ்ணு விஷால் உடன் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் பார்ப்பதற்கே மஞ்சிமா மோகன் படுகுபடு குண்டாக இருக்கிறார். அப்போது விழாவில் மஞ்சிமா மோகன் தன்னுடைய அனுபவத்தையும், இயக்குனர் குறித்தும், பிற நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

மஞ்சிமா மோகன் வீடியோவை வைரலாக்கும் நெட்டிசன்கள்:

இப்படி மஞ்சிமா மோகன் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்து பலரும் அவர் பேசியதை விட மஞ்சிமா மோகன் உடல் எடை குறித்து தான் விமர்சித்து ட்ரோல் செய்து வருகிறார்கள். அதிலும் சிலர் மஞ்சிமா மோகன் இவ்வளவு குண்டா ஆகிவிட்டீர்களா? என்னாச்சு? உடல் எடையை குறைக்க வில்லையா? என்று பலரும் கேட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நெட்டிசன்கள் இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். இதற்கு மஞ்சிமா மோகன் தரப்பில் இருந்து என்ன பதில்? வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement