எல்லாரும் பணமும், உணவும் கொடுத்தா. அசுரன் பட நடிகை டிவி கொடுத்திருக்காங்க. ஏன்னு பாருங்க.

0
909
manju
- Advertisement -

கேரள மாநிலத்தில் மலப்புரத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு சிறுமி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஊரடங்கு உத்தரவை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளது மத்திய அரசாங்கம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து துறைகளையும் மூடச் சொல்லி உத்தரவிட்டு உள்ளது. பள்ளி, கல்லூரி என அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஜூன் 1 முதல் எல்லா கல்வி நிறுவனங்களையும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மீண்டும் திறந்து வைத்து உள்ளது.

-விளம்பரம்-
manju

ஆன்லைன் வகுப்புகள் மூலம் அனைத்து பாட சப்ஜெக்ட்டுகளையும் ஆசிரியர்கள் எடுத்து வருகின்றனர். காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பாடம் எடுக்கப்படுகிறது. இதை பொதுக் கல்வித் துறையின் கீழ் உள்ள விக்டர் சேனல் மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. டிவி இல்லாதவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க படுகிறது. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள பல குடும்பங்கள் குறிப்பாக பழங்குடிப் பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டில் எல்லாம் டிவி மற்றும் போன்கள் இல்லாததால் இன்னும் அங்கிருக்கும் மாணவர்களால் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் அந்த குடும்பங்களை ஆதரிப்பதற்காக நடிகை மஞ்சு வாரியர், திரைப்பட தயாரிப்பாளர் ஆஷிக் அபு மற்றும் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் மூலம் தொலைக்காட்சிப் பெட்டிகளை நன்கொடையாக வழங்கி உள்ளார். மஞ்சு வாரியர் அவர்கள் ஐந்து தொலைக்காட்சி பெட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். இயக்குனர் உன்னி கிருஷ்ணன் மூன்று தொலைக்காட்சி, ஆஷிக் அபு 5 தொலைக்காட்சி பெட்டிகளையும் வழங்கினார். நடிகை மஞ்சு வாரியரின் இந்த செயலை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Kerala rings in new school year with virtual First Bell- The New ...

சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்” திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் பரிட்சியமான நடிகை இல்லை என்றாலும், மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் நடிகை மஞ்சு வாரியார் அவர்களை மலையாள திரை உலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள்.

-விளம்பரம்-
Advertisement