சினிமாவில் பிரேக், மகளின் சினிமா ஆசை – உடல் எடை குறைத்து ஆளே மாறியுள்ள மந்திராவின் லேட்டஸ்ட் பேட்டி

0
2186
- Advertisement -

சினிமாவில் தன்னுடைய மகள் நடிக்கப் போவது குறித்து நடிகை மந்த்ரா அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் மந்த்ரா. தமிழ் சினிமாவில் இவருக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் இருந்து வந்தனர். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களிலும் பல முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அஜீத் நடித்த ரெட்டை ஜட வயசு, விஜய்யின் லவ் டுடே போன்ற முன்னணி இளம் நடிகர்களுடன் ஒருகாலத்தில் ஜோடியாக நடித்தவர்.

-விளம்பரம்-

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த மந்த்ரா, சிம்புவின் வாலு, ஜீவாவின் கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்து இருந்தார். பின் இவர் தெலுங்கு இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் இவர் தமிழ், தெலுங்குப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். மந்த்ராவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. பின் கடந்த சில ஆண்டுகளாக இவர் படங்களில் நடிப்பதை முழுக்கு போட்டார்.

- Advertisement -

மந்த்ரா திரைப்பயணம்:

சமீபத்தில் அவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. அதோடு தமிழில் வாய்ப்பு குறைந்தாலும் அம்மணிக்கு தெலுங்கு சினிமா நன்றாகவே கை கொடுத்தது. உடல் எடை கூடியதால் இவர் தற்போது உடல் எடை குறைத்து இருக்கிறார். பின் இவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் விளம்பர படத்தின் சூட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள சென்னைக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் இவரை பார்த்து பிரபல பத்திரிக்கை பேட்டி ஒன்று எடுத்து இருக்கிறது.

மந்த்ரா அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பது, தற்போது நான் தெலுங்கில் மா என்ற சேனலில் சீரியல் ஒன்று நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த சீரியலுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அது மட்டும் இல்லாமல் சில படங்களும் செய்து கொண்டிருக்கின்றேன். குடும்பம், நடிப்பு என்று இரண்டையுமே சமமாக பேலன்ஸ் செய்து கொண்டு போகிறேன். அதேபோல் தமிழில் நடித்த நிறைய ஞாபகங்கள் எனக்கு இருக்கிறது. ஆனால், சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் என்னை நடிக்க கூப்பிடுறது இல்லை. ஏன் நம்மை கூப்பிட மாட்டார்கள் என்று நான் நினைத்து கூட பார்த்திருக்கிறேன்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா வாய்ப்பு குறித்து சொன்னது:

எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சூட்டிங் என்று வந்துவிட்டால் நான் பக்காவாக வந்து விடுவேன். இதை நான் நடித்த படங்களின் இயக்குனர்கள் இடையே கேட்டு தெரிந்து கொள்ளணும். என்னை கூப்பிடதற்கு ஒரு முக்கிய காரணமாய் எனக்கு தோணுவது நான் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லை என்று நினைக்கிறேன். அது என்னவோ சோசியல் மீடியா பக்கம் என்னால் போகவே முடியவில்லை. என்னுடைய நண்பர்கள் கூட ரீல்ஸ் எல்லாம் ஏன் போட மாட்டேங்கிறாய்? என்று கேட்பார்கள். என்னால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க முடியுமா என்று பார்க்கிறேன்.

மந்த்ரா மகள் நடிப்பு ஆர்வம்:

அதே சமயம் தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் வந்தாலும் இப்பவும் நான் நடிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய மகள் ரிதிமா. அவள் இன்னும் ஸ்கூல் படிப்பு முடிக்கவில்லை. நடிப்புக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் ஆர்வத்துடன் செய்வார். அவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. சொல்லப்போனால், இன்னும் ரெண்டு மூணு வருஷத்தில் அவள் ஹீரோயினியா வந்தாலும் வந்து விடுவாள் என்று நினைக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார்.

Advertisement