நடிகை மீனாவின் சொத்து மதிப்பு குறித்த விபரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் நடித்து கொண்டு அதன் பின் கதாநாயகியாக நடித்து வந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

அதிலும், இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அஜித், உள்ளிட்ட பல பிரபலங்களுடன் பிசியாக நடித்து இருக்கிறார். தமிழில் சிறிய இடைவெளி எடுத்து கொண்ட மீனா ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீனா அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது.
மீனா குடும்பம்:
இதற்கு இடையில் மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்தது. இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

மீனாவின் கணவர் மரணம்:
இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததனால் இந்த நோய் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டது. இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகி கடந்த ஆண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தார்கள். இருந்தும் சிகிச்சை பலன் இல்லாமல் வித்யாசாகர் இறந்து விட்டார். வித்யாசாகரின் இறப்பிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.
மீண்டும் படங்களில் மீனா:
மேலும், மீனாவிற்கு ஆறுதலாக அவளுடைய தோழிகள் தான் இருக்கின்றார்கள். தன்னுடைய கணவரின் இழப்பில் இருந்து மீண்டு வந்த மீனா தற்போது மீண்டும் படங்களில் நடித்துக் கொண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் யூடியூப் சேனல் ஒன்றில் தன்னுடைய வீட்டை சுற்றிக் காண்பித்திருக்கிறார். அதில் மிகப்பெரிய தோட்டத்துடன் மீனா வீடு இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=nL2TpqyMe5k
மீனா சொத்து மதிப்பு:
கேரளா ஸ்டைலில் பிரம்மாண்டமாக மீனா வீட்டை கட்டி இருக்கிறார். மேலும், கற்களால் ஆன சிற்பங்கள், அழகிய ஓவியங்கள் என்று பாரம்பரிய முறையில் இருக்கிறது. அவருடைய வீட்டில் பல அறைகள், நீச்சல் குளம், மினி தியேட்டர் என்று பல வசதிகளும் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மீனா உடைய பேங்க் பேலன்ஸ் கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 35 லிருந்து 40 கோடி வரை இவருக்கு சொத்து மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.






