அஜித்தின் வாலி, விஜய்யின் பிரென்ட்ஸ் படத்தில் நான் தான் நடிக்க இருந்தது. ஆனால், – மனம் திறந்த மீனா

0
564
- Advertisement -

உச்ச நடிகர்களின் படங்களில் நான் நடிக்க இருந்து தவறவிட்டது குறித்து நடிகை மீனா அளித்து இருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் நடித்து வருகிறார். அதன் பின் கதாநாயகியாக நடித்து வந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும், இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு,அஜித், உள்ளிட்ட பல பிரபலங்களுடன் நடித்து இருக்கிறார். இதற்கு இடையில் மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். நைனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மீனா கணவருக்கு ஏற்பட்ட பிரச்சனை:

இப்படி ஒரு நிலையில் வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்திருக்கிறது. இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த பாதிப்பு இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இதனால் ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் உயிர் இழந்தார்.

மீனா கணவர் இறப்பு:

கணவர் இறப்பிற்கு பின்னர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சோகத்தில் இருந்து மீனா மீண்டு வருகிறார்.
சமீபத்தில் கூட மீனாவின் பிறந்தநாளை அவருடைய நண்பர்கள் கொண்டாடி இருந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் மீனா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரை பயணம் குறித்து கூறியிருந்தது, எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ரிதமும் ஒன்று. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும். நிறைய படங்களின் பாடல்களுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு நடன காட்சிகளில் நடனமாடிருந்தேன்.

-விளம்பரம்-

மீனா அளித்த பேட்டி:

ஆனால், முத்து படத்தில் தில்லானா தில்லானா என்ற பாடலுக்கு ஈஸியான ஸ்டெப் தான் இருக்கும். அந்த பாடல் பெரிய அளவு ஹிட் ஆகும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. நான் கஷ்டப்பட்டு ஆடிய பாடல்களுக்கு கிடைக்காத வரவேற்பு இந்த பாடலுக்கு கிடைத்தது எனக்கு பெரிய வியப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் கால்ஷீட் காரணமாக பல உச்ச நடிகர்களின் படங்களில் பண்ண முடியாமல் போனது. அஜித் நடித்த வாலி படத்தில் நான் நடிக்க வேண்டியது. ஆனால், தேதி பிரச்சனை காரணமாக அந்த படம் மிஸ் ஆகிவிட்டது.

மீனா தவறவிட்ட படங்கள்:

ப்ரெண்ட்ஸ் படத்தின் மலையாள வெர்ஷனில் நான் தான் பண்ணி இருந்தேன். ஆனால், தமிழில் விஜய் உடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போதும் தேதி பிரச்சினை காரணமாக எனக்கு அந்த வாய்ப்பு தவறியது. தென்னிந்தியாவில் எல்லா மொழிகளிலும் நான் படம் பண்ணியிருக்கிறேன். ஆனால், முக்கியமான படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போனது. பொதுவாகவே நாம் நடித்துக் கொண்டிருக்கும் போது இந்த படம் ஹிட் ஆகும் என்று சொல்ல முடியாது. எந்த படத்தில் நாம் இடம்பெற்றாலும் நம்முடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisement