தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. அதுமட்டும் இல்லாமல் இவர் 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். மேலும், நடிகை மீனா அவர்கள் குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறார். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் எஜமான், அவ்வை சண்முகி, சிட்டிசன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அதோடு இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் அளவிற்கு ஹிட்டுக் கொடுத்தது. பின் நடிகை மீனா 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற ஒரு அழகான மகளும் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை மீனா அவர்கள் சிறிது காலம் சினிமா துறையில் பிரேக் எடுத்துக் கொண்டு இருந்தார். இந்நிலையில் நடிகை மீனா அவர்கள் 90 காலகட்டங்களில் இருந்த முன்னணி நடிகர் எல்லாருடைய படங்களிலும் நடித்து உள்ளார். ஆனால், தளபதி விஜய்க்கு ஜோடியாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், விஜய் உடன் சாஜகான் என்ற படத்தில் ‘சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்’ என்ற ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியுள்ளார். மேலும், அவருடன் நடிக்க வாய்ப்பு வந்த போதெல்லாம் அவர் மற்ற படங்களில் எல்லாம் கமிட்டாகி பிஸியாக இருந்தார் என்று கூறி உள்ளார். இது பற்றி நடிகை மீனா அவர்கள் கூறியது, தளபதி விஜயுடன் நடிக்க 3 அல்லது 4 முறை வாய்ப்பு வந்த போதெல்லாம் நான் தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன்.

இதையும் பாருங்க : காதலிக்காக உடல் எடையை குறைத்த கேப்டன் மகன். ஓகே சொன்ன கேப்டன். நிச்சயதார்த்த புகைப்படம் இதோ.

Advertisement

அதனால் தான் விஜயுடன் இணைந்து நடிக்க முடியவில்லை. அதோடு தமிழில் விஜய் நடித்த “பிரண்ட்ஸ்” படம் மலையாள மொழியில் இருந்து ரீமேக் செய்தது. அதுமட்டும் இல்லாமல் மலையாளத்தில் நான் தான் நடித்தேன். ஆனால், எனக்கு டைம் கிடைக்காததனால் தமிழில் பண்ண முடியவில்லை. மேலும், தமிழில் நான் நிறைய படங்களில் நடிக்க டேட்ஸ் இல்லாததனால் மிஸ் பண்ணியிருக்கேன். அந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கு. அதோடு அஜித் குமார் உடைய வாலி படத்தில் கூட நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் அப்ப வேறொரு படத்தில் கமிட்டாகி இல்லாததால் என்னால் அதில் நடிக்க முடியாமல் போனது.

அதுமட்டும் இல்லாமல் யாராலையும் இமேஜன் பண்ணி சொல்ல முடியாது எந்த படம் ஹிட்டாகும் இல்ல பிளாப் ஆகும்ன்னு. நம்ம எப்போயும் எல்லா படத்திலும் நம்மளுடைய பெஸ்ட்டா கொடுக்கனும் என்றும் கூறியிருந்தார். தற்போது நடிகை மீனா அவர்கள் முத்து படத்திற்கு பிறகு ரஜினிகாந்த்தை வைத்து சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. அதோடு மீனா அவர்கள் கரோலின் காமாட்சி என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

Advertisement
Advertisement