காதலிக்காக உடல் எடையை குறைத்த கேப்டன் மகன். ஓகே சொன்ன கேப்டன். நிச்சயதார்த்த புகைப்படம் இதோ.

0
181748
vijayakanth

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தே மு தி க தலைவருமுமான விஜயகாந்தின் இளைய மகன் விஜய பிரபாகரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது. விஜய்காந்த் பிரேமலதா தம்பதியருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் முத்த மகனான சண்முகபாண்டியன் கேப்டனை போல சினிமாவில் நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர், சகாப்தம், மதுர வீரன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்

- Advertisement -

மேலும், கேப்டனின் இளைய மகனான விஜய பிரபாகரன் கேப்டனின் கட்சியான தே.மு.தி.கவின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கேப்டனை போல இவர் கட்சி பொது கூட்டத்தில் பேசிய பேச்சுக்கள் பல்வேறு காட்சிகளை திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில் விஜய பிரபாகரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஸ்டாம்ப்வெண்டர் இளங்கோவின் மகளுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. 

இதையும் பாருங்க : வீட்டிற்கு தெரியாமல் கமல் படத்தில் நடித்து வீட்டில் அடிவாங்கிய வடிவுக்கரசி. அவரே சொன்ன தகவல்.

ப்டன் மகன் விஜய் பிரபாகரனுக்கு கல்லூரி காலத்திலிருந்தே ஒரு காதலி இருந்ததும், அவருக்காகத்தான் உடல் எடை குறைத்ததாகவும் ஒரு பேட்டியில் முன்பே கூறியிருந்தார் விஜய பிரபாகரன். எட்டு வருடங்கள் காதலித்து வந்த விஜய பிரபாகர் பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணத்தை நடத்த எதிர்நோக்கியிருந்த நிலையில் கேப்டன் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் சம்மதித்ததால் இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் திடீரென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
பிரேம லதா

மேலும், இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது. கேப்டன் மற்றும் பெண் விட்டார் என இரு குடும்ப வீட்டினர் மட்டுமே கலந்து கொண்ட இந்த நிகழ்வின் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. கேப்டன் மகனின் திருமணம் வரும் தை மாதத்தில் நடைபெறும் என கேப்டனின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த திருமணத்தில் பல்வேறு சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement