இரண்டாம் திருமணத்திற்கு தயரானரா மீனா? அந்த நபர் இவர் தானா ? உண்மை என்ன ?

0
644
meena
- Advertisement -

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் மீனா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது வரை இவர் படங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்திருந்த அண்ணாத்த படத்தில் மீனா நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு மீனா இந்த படத்தில் ரஜினி உடன் சேர்ந்து நடித்திருந்தார். இதனை அடுத்து பல படங்களில் மீனா கமிட்டாகி இருக்கிறார்.

- Advertisement -

மீனா கணவர் இறப்பு:

இதனிடையே மீனா அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியரான வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் நைனிகா என்ற மகள் இருக்கிறார். மீனாவின் மகளும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இவருடைய இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

மீண்டும் படப்பிடிப்பில் மீனா:

மீனாவிற்கு இது ஒரு பெரிய இழப்பு என்றே சொல்லலாம்.மீனாவை இந்த இழப்பில் இருந்து மீட்டு வரும் முயற்சியில் அவருடைய நண்பர்களும் இருந்தனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீனா தேறி வருகிறார். சமீபத்தில் தான் மீனா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடு இருந்தார். பிறகு நடிகை மீனா அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்திருக்கிறார்.

-விளம்பரம்-

மீனாவின் இரண்டாவது திருமணம்:

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மீனா மனம் தேற்றி வருகிறார். சமீபத்தில் தான் சினிமா படப்பிடிப்புகளிலும் மீனா கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் மீனா இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது மீனாவிற்கு 46 வயது தான் ஆகிறது. இதனால் இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மீனா மகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் வைத்து தான் மீனாவை இரண்டாவது திருமணம் செய்ய சொல்லி அவருடைய பெற்றோர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

மீனா திருமணம் செய்யும் நபர்:

மீனா தனக்கு இரண்டாவது திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறி மறுத்திருக்கிறார். ஆனால், தற்போது இரண்டாவது திருமணத்திற்கு மீனா ஓகே சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. தங்களுடைய நீண்ட நாள் குடும்ப நண்பர் ஒருவரை தான் மீனா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் தகவல் தான் சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காகவே இருக்கிறது. இது உண்மையா? வதந்தியா? என்பது தெரியவில்லை. இது குறித்து மீனா என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement