நான் நடிக்கும் போது செக்ஸ் டார்ச்சர் இருந்தது.! ஆனால் எனக்கு..? மீனா அதிரடி பதில்

0
28427
Meena

சினிமா துறை பொறுத்த வரை நடிகைகளுக்கு பாலியல் ரீதியான பல தொல்லைகள் இருந்து கொண்டுதான் வருகிறது. ஆனால், இதுநாள் வரை இது குறித்து எந்த ஒரு நடிகையும் வெளிப்படையாக பேச முன்வராமல் இருந்து வந்தனர்.

Sri Reddy
Sri Reddy

ஆனால், சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து ஏற்படுத்தி வந்த சர்ச்சைக்கு பிறகு பல நடிகைகளும் இது குறித்து வாய் திருந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தமிழ் சினிமா நடிகை மீனாவும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து கருத்து தெரிவித்துளளார்.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை மீனா, திரை வாழக்கையில் தான் கடந்து வந்த பாதை குறித்து பல்வேறு விடயங்களை தெரிவித்திருந்தார். அப்போது சினிமா துறையில் பெண்களை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

Actress-Meena

-விளம்பரம்-

அதற்கு பதிலளித்திருந்த நடிகை மீனா ”சினிமா துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பிரச்னை உண்டு. நான் நடிக்கும் காலத்திலேயும் இந்தப் பிரச்சினை இருந்தது, ஆனால், நான் இதையெல்லாம் எதிர்கொள்ளவில்லை. வக்கிர புத்தியுடைய ஆண்கள் சிலர் திருந்தணும். அவங்க ஒரு பொண்ணுகிட்ட இதுபோன்று விடயங்களை கேட்பதற்கு முன்னாள், தங்களுக்கும் மனைவி, மகள் இருப்பதை அவர்கள் உணர வேண்டும். திறமைக்கான வாய்ப்பை வேறு எந்த சமரசமும் இல்லாமல், பெண்கள் போராடிப் பெறணும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement