‘நம்மிடம் இருப்பது இந்த நிமிடம் மட்டுமே ’ – தன் Time Line புகைப்படங்களை கொண்டு மீனா பகிர்ந்த வீடியோ.

0
460
meena
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் நடித்து வருகிறார். அதன் பின் கதாநாயகியாக நடித்து வந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும், இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு,அஜித், உள்ளிட்ட பல பிரபலங்களுடன் பிசியாக நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் மீனா நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு மீனா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மீனா பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மீனா குடும்பம்:

இதற்கு இடையில் மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். நைனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர். இப்படி ஒரு நிலையில் வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்திருக்கிறது.

meena

மீனா கணவருக்கு ஏற்பட்ட பிரச்சனை:

இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததனால் ஏற்பட்ட நோய் என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், ஏற்கனவே இந்த பாதிப்பு இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இதனால் ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள்.

-விளம்பரம்-

கணவர் சோகத்தில் இருந்து மீண்டு வரும் மீனா :

இருந்தும் சிகிச்சை பலன் இல்லாமல் சமீபத்தில் தான் வித்யாசாகர் இறந்து விட்டார். வித்யாசாகரின் இறப்பிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். தன்னுடைய கணவர் இறந்த பிறகு மீனா சமூக வலைத்தளம் பக்கமே அதிகம் வராமல் இருந்தார்.ஆனால், சமீபத்தில் தான் தன் தோழிகளுடன் வெளியில் வந்தார் மீனா. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

மீனா பகிர்ந்த வீடியோ:

இந்நிலையில், நடிகை மீனா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், மீனா சிறு வயதிலிருந்து தற்போதுவரை இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் அந்த வீடியோவுடன், ‘வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது. வாழுங்கள். நம்மிடம் இருப்பது இந்த நிமிடம் மட்டுமே ’என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவரது இந்த இன்ஸ்டா போஸ்ட் வைரலாகியுள்ளது.

Advertisement