Home பொழுதுபோக்கு சமீபத்திய

நான் லவ் பண்றேன் அது இவர்களுடைய கணவனுக்கு தெரியும் என்றார். பஞ்சாயத்தில் மேலும் ஒரு ஜீ தமிழ் நடிகை மின்னல் தீபா.

0
21829
minnal-deepa
-விளம்பரம்-

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த மாயி படத்தில் வடிவேலுக்கு பெண் பார்க்கச் செல்லும் போது ‘வாம்மா மின்னல்’ என்ற டயலாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தீபா. இதனால் அனைவரும் இவரை ‘மின்னல் தீபா’ என்று தான் அழைக்கிறார்கள். இந்த படத்திற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம். இவருக்கு சினிமாவில் வாய்ப்பு குறைவே தொடங்கியவுடன் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் யாரடி நீ மோகினி தொடரில் தீபா நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை தீபாவை ஒருத்தர் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்து விட்டதாக தகவல் சமூகவலைத்தளங்களில் பரவியது. இது குறித்து அவரிடம் பேட்டியில் கேட்டபோது, அதில் அவர் கூறியது, சினிமாவிலும், சின்னத்திரையிலும் பல வருடங்களாக நான் நடித்துக் கொண்டு வருகிறேன். என்னைக்காவது என்னை பற்றி ஒரு சர்ச்சையான செய்தி வந்தது உண்டா? பிரண்ட் என்று சொல்லி பழகுன ஒருத்தரால் வந்த வினை தான் இது. என்னோட திருமண வாழ்க்கையில் சின்னதா ஒரு பிரச்சனை. எனக்கும் என் கணவருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த பிரச்சனை சீக்கிரமாகவே முடிவுக்கு வந்துவிடும் என்று நாங்கள் இரண்டு பேருமே நம்புகிறோம்.

எங்களுடைய குடும்ப பிரச்சினையில் மூன்றாவதாக ஒரு நபர் புகுந்து விட்டார். அவங்க ரெண்டு குடும்பத்துக்கும் தெரிந்தவர். நண்பர் என்று சொல்லி தான் முதலில் பழகினார். இதனால் எங்களுக்கு பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஆனால், போகப்போக அந்த நபருடன் நடவடிக்கைகள் மாறத் தொடங்கியது. அதிலும் ஒரு கட்டத்தில் நான் என் கணவருடன் பிரிந்து இருப்பதை அவருக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்தார். இதை நான் புரிந்து கொண்டு அவரோடு பேசுவதை நிறுத்தி விட்டேன். அதனால் அவர் முன்னை விட என்னிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ள முயற்சி செய்தார்.

-விளம்பரம்-

என்னை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று என்க்கு தெரிந்தவர்கள் இடம் சொல்ல ஆரம்பித்தார். தொடர்ந்து என்னை போனில் தொந்தரவு செய்து கொண்டே இருந்தார். அன்னைக்கு ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து விட்டார். அங்கு வந்து ஏன் என்னுடன் பேச மாட்டாயா என்று என்னை டார்ச்சர் செய்தார். என் போனை வாங்கி நான் யார் யார் கிட்ட பேசி இருக்கேன் என்று பார்த்து கோபம் வந்து மொபைலை உடைத்துப் போட்டார். அப்புறம் என்னையும் அடித்து ஒரு பெரிய பிரச்சனையே செய்தார்.

-விளம்பரம்-

அது மட்டுமில்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்களிடம் நான் இவங்களை லவ் பண்றேன் என்றும் அது இவர்களுடைய கணவனுக்கு தெரியும் என்றும் கத்திக் கூச்சல் போட்டு சொல்லி இருந்தார். என்னோட கணவர் வந்த பிறகு தான் அவர் அங்கிருந்து போனார். நாங்கள் குடும்ப நண்பர் என்பதால் தான் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இப்ப அவரோட குடும்பத்தை சேர்ந்தவர்கள் இடம் இது குறித்து பேசி இருக்கோம். இன்னொருமுறை சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து என்னை டார்ச்சர் செய்தால் கண்டிப்பாக போலீசில் புகார் கொடுப்பது தவிர வேற வழியில்லை என்று என்று கூறினார். ஏற்கனவே தீபா நடித்து வரும் யாரடி நீ மோகினி சீரியலில் ஈஸ்வர் மஹஸ்வரி பிரச்சனை பெரிய பஞ்சாத்தாக ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news