அந்த படத்தில் கமலுடன் நடிக்க வாய்ப்பு வந்தும் இதனால் தான் மறுத்துவிட்டேன் – நதியா சொன்ன காரணம்.

0
1771
Kamal
- Advertisement -

கமலின் விக்ரம் படத்தில் வாய்ப்பு வந்தும் அதில் நடிக்க மறுத்த காரணம் குறித்து முதல் முறையாக கூறி உள்ளார் நதியா. தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நதியா. இவருடைய இயற்பெயர் சரீனா அனூஷா. இவர் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பின் 2004 ஆம் ஆண்டு முதல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருடைய பூர்வீகம் கேரளா. அப்பா என்.கே.மொய்து. கேரளாவின் தல சேரியை சேர்ந்த முஸ்லிம். அம்மா லலிதா திருவல்லாவை சேர்ந்த இந்து. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

-விளம்பரம்-

மேலும், 1984 ஆம் ஆண்டில் பாசில் தனது நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு என்ற திரைப்படத்தில் நதியாவை அறிமுகப்படுத்தினார்.இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப் படத்தின் மூலம் தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே நதியா ஆண்களின் மனதில் மட்டுமின்றி பெண்கள் மத்தியிலும் புகழ் பெற்றார். நதியாவின் கண்ணியமான தோற்றம், துடிப்பான நடிப்பு, நவநாகரிக உடைகள், ஹேர் ஸ்டைல் என அனைத்தும் பெண்கள் மத்தியில் பேசு பொருளானது.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் 90 காலகட்டத்தில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லித் தான் பொருள் விற்பார்கள். அந்த அளவிற்கு நதியா மிக பிரபலமான நடிகையாக இருந்தவர். பின் இவர் 1988 ஆம் ஆண்டு மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். நடிகை நதியா முன்னணி நடிகையாக இருந்த போது தமிழில் பல உச்ச நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்தார்.

தமிழில் ரஜினி, விஜயகாந்த், மோகன், பிரபு என்று பல நடிகர்களுடன் நடித்த நதியா, கமலுடன் மட்டும் நடிக்கவே இல்லை. கமல் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்ததை மறுத்துவிட்டார். இது அப்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கர பேசுபொருள் ஆனது. அப்போது கமல் காதல் இளவரசனாக கொடிகட்டி பறந்தவர். அவர் படத்தின் பாடல் காட்சிகளும் காதல் காட்சிகளும் பயங்கர பிரபலம். அவர் திரையில் நெருங்கி உணர்வுபூர்வமாக நடிக்கக் கூடியவர்.

-விளம்பரம்-

அதிலும் கமலின் நடிப்பில் வெளிவந்த பாடல்களும், நெருக்கமான கட்சிகளும் இளசுகள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது.மல் படம் என்றாலே முத்தம் உறுதி என்ற நிலையில் கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பை உதறினார் நதியா. முத்த பயத்தினால் தான் கமல் உடன் நடிக்க மறுத்ததாக செய்திகள் பரவியது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நதியாவிடம் கமல் படத்தில் ஏன் இதுவரை நடிக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நதியா ‘கமல்ஹாசனுடன் இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்காதது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. கமலுடன் நடிக்க முடியாமல் போனதற்கு ஒரே காரணம் கால்ஷீட் பிரச்சனை தான். அவர் படத்தில் நடிக்க என்னை அணுகும்போதெல்லாம் நான் வேறொரு படத்தில் கமிட் ஆகியிருப்பேன், ‘விக்ரம்’ படத்தில் முதல் பாகத்தில் நடிக்க வேண்டியது நான் தான். ஆனால் அந்த சமயத்தில் நான் நிறைய பாடங்களில் கமிட் ஆகியிருந்தால் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய்விட்டது .கமல் சார் இன்னமும் நடிக்கிறார், நானும் இன்னமும் நடிக்கிறேன் ,வாய்ப்பு கிடைத்தால் அவருடன் சேர்ந்து நடிப்பேன்என்று கூறியுள்ளார்.

Advertisement