குடும்பம் பிள்ளை குட்டி என்று செட்டில் ஆன தங்கை – 48 வயதிலும் திருமணம் செய்யாமல் இருக்கும் காரணம் குறித்து சொன்ன ஜோதிகா.

0
2363
Nagma
- Advertisement -

தன்னுடைய திருமணம் குறித்து நக்மா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருந்தவர் நடிகை நக்மா. இவருடைய உண்மையான பெயர் நந்திதா மொராஜி. திரையில் நக்மா என்று மாற்றிக் கொண்டார். இவர் ஆரம்பத்தில் தன்னுடைய நடிப்பு பயணத்தை பாலிவுட்டில் தான் தொடங்கியிருந்தார்.

-விளம்பரம்-

பின் சில படங்கள் ஹிந்தியில் நடித்துவிட்டு தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் நக்மா.
2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்த காவலன் படத்தின் மூலம் தான் நக்மா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் கார்த்திக், பிரபுதேவா,ரஜினி,நெப்போலியன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். மேலும், தென்னிந்திய படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் நக்மா இங்கேயே அதிக கவனம் செலுத்த தொடங்கி இருந்தார்.

- Advertisement -

நக்மாவின் திரைப்பயணம்:

அதிலும் பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனதும் நக்மா உடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு இருந்தது. அதன் பின் நக்மாவின் மார்க்கெட் எகிறியது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

நக்மா கடைசியாக நடித்த படம்:

பின் இடைப்பட்ட காலத்தில் கதாநாயகியாக வாய்ப்பை இழந்த நக்மா நீண்ட இடைவெளிக்கு பின் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘தீனா’ படத்தில் ஒரு நடிப்பில் மட்டும் நடனம் ஆடி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த சிட்டிசன் படத்தில் ஒரு சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார். அதன் பின்னர் நக்மா போஜ்புரி படங்களில் கவனம் செலுத்தி இருந்தார். மேலும், சிட்டிசன் படத்திற்கு பின்னர் இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திலும் நக்மாவை காண முடியவில்லை.

-விளம்பரம்-

நக்மா அரசியல்:

அதோடு நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். மேலும், சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் நக்மா அரசியலில் குதித்து விட்டார்.முதலில் இவர் பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் இவர் காங்கிரஸில் இணைந்து கொண்டார். தற்போது நீண்ட காலமாகவே இவர் காங்கிரஸியில் தான் பயணித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை நக்மா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

திருமணம் குறித்து சொன்னது:

அதில் அவர் தன்னுடைய திருமணம் குறித்து கூறியிருந்தது, எனக்கு இப்போது 48 வயது ஆகியிருக்கிறது. திருமணம் செய்யக்கூடாது என்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. சொல்லப்போனால், திருமணம் செய்து குடும்பம், குழந்தைகள் என்று வாழ்வதற்கு எனக்கு ஆசையாக தான் இருக்கிறது. அப்படி ஏதும் நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இருந்தாலும், திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தாலும் நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement