என்ன நிறைய பேருக்கு பிடிக்காதுன்னு தெரியும் ஆனா – மைனா பட நடிகையை ட்விட்டரில் நக்மா பிளாக் செய்த காரணம்.

0
15995
suzana
- Advertisement -

சில நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை காதலித்தனர் என்ற பல வதந்திகளும் வந்தது .உதாரணமாக கங்குலி-நக்மா,யுவராஜ் சிங்-தீபிகா படுகோன் ஆகியோர்களின் காதல்கள் கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், 90ஸ் ரசிகர்களுக்கும் நக்மா மற்றும் கங்குலியின் காதல் கிசு கிசுக்கள் பற்றி நன்றாக தெரிந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. 2000களில்  கங்குலியும், நக்மாவும் தென்னிந்தியாவில் உள்ள சில கோவில்களுக்கு சென்று, அங்கு திருமணம் செய்து கொண்டவர்கள் செய்யும் பூஜையை தாங்களும் செய்ததாக கூறப்பட்டது. 

-விளம்பரம்-

ஆனால், கங்குலியும் இந்த வதந்திகளை மறுத்தார். ஆனால், அதன்பின்  ஓரிரு ஆண்டுகளுக்கு பிறகு  இந்த வதந்தி குறித்து நக்மா அளித்த பேட்டியொன்றில் “ஒருவர் வாழ்வில் ஒருவர் இருப்பதை மறுக்காத வரை, எந்தவொரு நபருக்கும் அவர்கள் விரும்பும் எதையும் சொல்ல முடியும்” என்று தெளிவில்லாத பதிலை கூறினார். நக்மாவுடனான காதலுக்கு முன்பே கங்குலிக்கு திருமணம் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை நக்மா கடந்த ஜூலை 8 கங்குலிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்திருந்தார். நக்மாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர் ஒருவர், யாரவது டோனா தி (கங்குலி மனைவி) டேக் செய்யுங்க என்று கேலி செய்திருந்தார். அந்த ரசிகரை நடிகை நக்மா உடனே பிளாக் செய்து இருந்தார்.

ஆனால், மைனா படத்தில் வில்லியாக நடித்த சுசானாவையும் பிளாக் செய்துள்ளார். அதற்கு காரணம் நக்மா பிளாக் செய்த அந்த ரசிகர் சுசானாவின் மைனா பட டெம்ப்லட்டை பதிவிட்டு தானாம். இதுகுறித்து பதிவிட்டுள்ள சுசான, ஒரு பிரபலமான நடிகை என்றதும் எனக்கு பிடித்த நடிகை என்னை பிளாக் செய்து இருப்பது பெருமையாக இருக்கிறது. அதுவும் இந்த மீமால் தான். என்ன நிறைய பேருக்கு பிடிக்காதுன்னு தெரியும் ஆனா என்ன மக்கள் இவ்ளோ வெறுப்பாங்கன்னு நினைக்கல. பெரிய விசில் அடிங்க .என்று பதிவிட்டிருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement