நான் சென்னையில் பிறந்ததால கிராமத்து வாழ்க்கை எனக்கு – விவாகரத்து குறித்து பேசிய நடிகை நளினி.

0
6085
nalini
- Advertisement -

90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் நடிகர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுஸரில் நடித்து அந்த படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும்.நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்ததும் அந்தக் காலத்தில் மிகப் பெரிய சாதனைதான். 

-விளம்பரம்-

அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது.இன்றளவும் ராமாஜனின் பாடல்கள் கிராமத்து வாசிகள் மத்தியில் கேட்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த ராமராஜன் இடையில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அதன்பின்னர் ஆ தி மு க அணியில் இணைந்து தீவிர அரசியல்வாதியாகவும் அவதாரமெடுத்தார்.

- Advertisement -

ராமராஜன் தன்னுடன் பல படங்களில் நடித்த நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. பின்னர் 2000 ஆம் ஆண்டு ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் நளினி. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நளினி, தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளார். அதில், என்னதான் நாம் இழுத்து பிடித்தாலும் கடைசியில் பெண்களை தான் தப்பு சொல்வார்கள்.நாம் என்ன தான் அந்த உடைந்த கண்ணாடியை ஓட்ட வைத்தாலும் உடைந்தது உடைந்தது தான்.

வீடியோவில் 24:10 நிமிடத்தில் பார்க்கவும்

நான் பிரிந்தது நல்லது என்று தான் தோன்றுகிறது. பிறந்ததால் தான் இன்று என் குழந்தைகள் நல்லா இருக்காங்க. நான் சென்னையில் வளந்ததால அந்த கிராமத்து வாழ்கை எனக்கு ஓட்டவில்லை. சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பூகம்பமாக வெடித்து. உள்ளுக்குள்ளேயே அழுது நமக்கு யாரும் இல்லை என்று நினைத்து அந்த அழுத்தத்தால் நிறைய சாப்பிட்டு ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு சென்றுவிட்டேன். அதையெல்லாம் தாண்டி எனக்கு விவாகரத்து கிடைத்தது பெரிய ஆசிர்வாதம் என்று கூறியுள்ளார் நளினி.

-விளம்பரம்-
Advertisement