17 வயதில் நடத்திய முதல் போட்டோ ஷூட், அதன் மூலம் வந்த மிஸ் பெமினா வாய்ப்பு. நமீதா பகிர்ந்த புகைப்படம்.

By Rajkumar · 2/9/2021

தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நமீதா. அறிமுகமான முதல் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நமிதா. தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமிதா. இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம்.

எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நமிதாவிற்கு பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.

இதையும் பாருங்க : இந்து முறைப்படி வளைகாப்பை நடத்தியுள்ள பரீனா - குவியும் வாழ்த்துக்கள்.

2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை நடிகை நமீதா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக தன்னுடைய அறிய இளம் வயது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் நமீதா. இப்படி ஒரு நிலையில் தனது 17 வயதில் எடுத்த முதல் போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் மும்பையில் தன்னுடைய தாய் தந்தையருடன் இருந்தபோது தன்னுடைய 17 வயதில் நடத்திய முதல் போட்டோ ஷூட் புகைப்படம் இது என்றும் 2000 ஆம் ஆண்டு நடிகர் பூமான் இரானி எடுத்த இந்த புகைப்படங்கள் மூலமாகத்தான் 2001ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் தேர்வானதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் நடிகை நமீதா

behindtalkies AMP · Quick view
View full