நயன்தாராவின் உதவியாளர்களுக்கு ஒரு நாளைக்கு மட்டும் இவ்வளவு செலவா ! பாத்தா அசந்திடுவீங்க

0
795
Actress Nayanthara

தமிழ் தயாரிப்பாளர் ராஜன் தமிழ் நடிகர்களை பற்றியும்,இயக்குனர்களை பற்றியும் பல விமர்சனங்களை வைத்துள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்று பேசிய அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் ,அஜித் போன்றவர்கள் மீதுவிமர்சனங்களை
வைத்திருந்தார்.இந்நிலையில் தமிழ் சினிமாவின் லைடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பல கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர் என்பது நமக்கு தெரியும்.ஆனால்,நயன்தாராவின் சம்பளம் எவ்வளவு அவருடன் பணியாற்றும் நபர்களின் சம்பளம் எவ்வளவு என்று புட்டு புட்டு வைத்துள்ளார் ராஜன்.

nayanthara

இதுபற்றி அவர் தெரிவிக்கையில் தனது முதல் படங்களில் லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருண்டிருந்த நயன்தாரா பின்னர் படிப்படியாக 3 கோடிக்கும் தனது சம்பளத்தை உயர்த்தினார். பின்னர் திடிரென்று தனது சம்பளத்தை 5 கோடி என்று உயர்த்திவிட்டார்.ஏதோ நயன்தாராவிற்கு ஏதோ சாப்பாட்டுக்கு வழியில்லை என்பதுபோல சம்பளத்தை அடிக்கடி உயர்த்துகிறார்.

மேலும் நயன்தாரா ஷூட்டிங் வரும்போது 5 உதவியாளர்களை அழைத்து வருகிறார். அவர்களுக்கு ஒரு நாள் செலவு மட்டும் 60 ஆயிரம் ஆகிறது. அது தவிர கேரவனுக்கு தினமும் 10 ஆயிரம் செலவாகிறது.இந்த செலவை எல்லாம் யார் பொறுப்பேற்பது தயரிப்பாளர்களான எங்கள் மீது தானே அந்த செலவுகள் மொத்தமாக வந்துவிடுகிறது என்று மிகவும் காட்டத்துடன் கூறியுள்ளார்.