நயன்தாரா மேக்கப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட்டுக்கே ஒரு நாள் சம்பளம் இவ்வளவு – தயாரிப்பாளர் காட்டம்.

0
2094
nayan
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. சொல்லப்போனால் நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று கூட அழைப்பார்கள்.

-விளம்பரம்-

இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர். பின்னர் தமிழில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நயன் சமீப காலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா அவர்கள் தயங்குவது கிடையாது.

இதையும் பாருங்க : உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய பிரியா மணி – வேற லெவல் Transformation.

- Advertisement -

கடந்த ஆண்டு தர்பார் மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டு படங்களில் மட்டும் தான் நயன்தாரா நடித்து இருந்தார். ஆனால், இந்த ஆண்டு அண்ணாத்தே, நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா, தனது மேக்கப் கலைஞ்சர்களுக்காக லட்சக்கணக்கில் தயாரிப்பாளர்களின் பணத்தை செலவு செய்கிறார் என்று தயாரிப்பாளர் ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து வெட்டிபேசுங்க இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது :

இப்போ எல்லா நடிகர்களும் பாடிகாட் வைத்திருக்கிறார்கள் படப்பிடிப்பில் அவர்களுக்கு என்ன பாடிகார்டு தேவை உள்ளது. அதே போல நடிகை நயன்தாரா, ஆண்ட்ரியா முதற்கொண்டு சில நடிகைகள் பாம்பேவில் இருந்து மேக்கப், சிகை அலங்காரம் என 5,6 உதவியாளர்களை விமானத்தில் வரவைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம் தயாரிப்பாளர்கள்தான் தரணும் .ஏன் இங்கு யாரும் உதவியாளர்கள் இல்லையா? அவர்கள் தலை முடி என்ன தங்கத்துலயா இருக்கு. அவங்களுக்கு ஒரு நாள் செலவு ஒரு லட்சம் என்கிறார்கள். 50 நாட்கள் படப்பிடிப்பு என்றால் 50 லட்சம் ரூபாய் அதுக்கே போய்விடும். இது யாரையும் குறை சொல்வதற்காக அல்ல தயாரிப்பாளர்கள் இதுபோன்ற செலவுகளை மிச்சப்படுத்தினாலே நஷ்த்திலிருந்து ஓரளவிற்கு தப்பிக்கலாம் என்று பேசியிருக்கிறார் ராஜன்.

-விளம்பரம்-

Advertisement