நடிகை நீலிமா ராணியின் அழகிய குடும்பம். இவருக்கு இவ்வளவு பெரிய மகளா.

0
186510
neelima
- Advertisement -

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளை விட வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகளே அதிகம். அந்த வகையில் பிரபல நடிகையான நீலிமா ராணியும் ஒருவர். உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள இவர், இதுவரை பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

இதுவரை தமிழ் சினிமாவை பிரசாந் நடித்த விரும்புகிறேன்,சிம்பு நடித்த தம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமக நடித்தார்.மேலும் சில வருடங்கள் கழித்து மொழி ,ராஜாதி ராஜா,சந்தோஷ் சுப்ரமணியன், நான் மஹான் அல்ல போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் நடித்த முதல் சீரியல் 1998 தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற தெலுகு சீரியளில் தான்.

இதையும் பாருங்க : நாட்டாமை டீச்சர் இப்போ எப்படி இருக்கார், என்ன பன்றார் பாருங்க. புகைப்படம் இதோ.

அதன் பின்னர் இவர் தமிழ்,தெலுகு, மலையாளம் என பல தொடர்களில் நடித்துள்ளார். இதுவரை 15 கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இறுதியாக கதிர் நடிப்பில் வெளியான ‘சத்ரு’ படத்தில் கதிரின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அரனமனை கிளி ‘ தொடரிலும் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் ”சக்கோயம் மரியம்” என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Image result for neelima rani marriage photos

நடிகை நீலிமா ராணி சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியளில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு அழகான பின் குழந்தையும் பிறந்தது. சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement