சரக்கை விளம்பரம் செய்த சிம்பு பட நடிகை – கண்ட மேனிக்கி கமன்ட் செய்யும் நெட்டிசன்கள். சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

0
429
nidhi
- Advertisement -

மதுபான விளம்பரத்தில் நடித்து சிக்கிய நடிகையின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே நடிகைகள் சினிமாவில் நடிப்பதை தாண்டி விளம்பரங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். சினிமாவில் சம்பாதிப்பதற்கு இணையாக விளம்பரங்களில் நடித்தும் கோடிக்கணக்கான சம்பாதித்து வருகிறார்கள். மேலும், சமீப காலமாகவே முன்னணி நடிகர், நடிகைகள் அதிக பணம் வாங்கிக் கொண்டு வெளிநாட்டு மதுபானங்களை அவர்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் விளம்பரம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

பொதுவாகவே நடிகைகள் அழகு சாதன பொருட்கள், துணிகள், நகைகள், உணவு பொருட்கள் என பல விளம்பரங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்கள். ஆனால், தற்போது மது விற்பனை செய்யும் விளம்பரங்களில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும், நடிகைகள் இப்படி மது விற்பனையில் இறங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு சமீப காலமாக நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பொருட்களை விளம்பரம் செய்து காசு பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

மது விளம்பரத்தில் நடிகைகள்:

இதில் சில தரமற்ற பொருள்களை நடிகைகள் விற்பதன் மூலம் சில பிரச்சினைகள் இருந்தது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இதையெல்லாம் தாண்டி ஒரு படி போய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக திகழும் பூஜா ஹெக்டே, ராய்லட்சுமி, ஹன்சிகா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் மது விளம்பரத்தை சர்வ சாதாரணமாக செய்து இருக்கிறார்கள்.

மது விளம்பரத்தில் நடிகை நிதி அகர்வால்:

தற்போது இந்த வரிசையில் மீண்டும் தமிழ் நடிகை மது விளம்பரத்திற்காக வீடியோ ஒன்றை போட்டு உள்ளார். அவர் வேற யாரும் இல்லைங்க நடிகை நிதி அகர்வால். இவர் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம்ரவியுடன் பூமி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் உதயநிதி ஸ்டாலின் மகிழ்திருமேனி இணைந்த படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மது விளம்பர வீடியோ போட்ட நடிகை நிதி அகர்வால்:

இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்த நிலையில் புத்தாண்டை கொண்டாட்டத்தை முன்னிட்டு நிதி அகர்வால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மது விளம்பர வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நடிகை நிதி அகர்வால் ஒரு பிராந்திய விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தில் அவர் குறிப்பிட்ட நிறுவனத்தின் பிராந்தியை கோப்பையில் ஊற்றி அதை முகர்ந்து பார்த்து செம என்றும், இது இந்தியாவின் மிகச்சிறந்த மதுவகை என்றும் கூறியிருக்கிறார். .

கன்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்:

தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறதுஇதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நீங்கள் விஸ்கி பிராந்தி விளம்பரம் செய்யலாமா? என்று கூறுகிறார்கள். மேலும், எல்லாரும் புத்தாண்டில் இனிமே குடிக்க கூடாது என்று முடிவு எடுப்பார்கள், நீங்கள் என்னடானா குடிக்க சொல்றீங்க என்றும் கமன்ட் செய்து வருகின்றனர். பின் இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் இந்த விளம்பரங்கள் இளைஞர்கள் மது அருந்துவதை தூண்டுவதாக இருக்கிறது. இப்படி நடிகைகளே இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வது மிகவும் தவறு என்றும், இந்த மாதிரியான விளம்பரங்கள் எடுக்கக் கூடாது என்றும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement