குழந்தைக்கு தாயான நிலையில் பொது நிகழ்ச்சிக்கு டிரான்ஸ்பரண்ட் ஆடையில் வந்த சூடான கோழி நிகிதா.

0
29051
nikitha
- Advertisement -

தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வைபவ், சரண் போன்றவர்கள் பலர் நடிப்பில் வெளியான ‘சரோஜா’ படத்தில் இடம்பெற்ற சூடான கோழி என்ற பாடல் அந்த காலகத்தில் இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. அந்த பாடலில் ஒரு கவர்ச்சியான நடனமாடி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை நிகிதா. மும்பை பூர்வீகமாக கொண்ட இவர் 2002 ஆம் ஆண்டு இந்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியல் தொடர் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

அதன்பின்னர் 2002ஆம் ஆண்டு வெளியான ‘ஹாய்’ என்ற தெலுங்கு படத்தில் இவருக்கு சினிமாவில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இவர் முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு வெளியான ‘குறும்பு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் இரண்டாம் கதாநாயகியாக தான் நடித்திருந்தார். அதன் பின்னர் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ சிபிராஜ் நடித்த ‘வெற்றிவேல் சக்திவேல்’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இவருக்கு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘போங்கு ‘ என்ற படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தோன்றி இருந்தார்.

இதையும் பாருங்க : விஜய் மற்றும் வெற்றிமாறன் திடீர் சந்திப்பு. வெற்றிமாறன் சொன்ன கதைக்கு ஓகே சொன்னாரா ?

- Advertisement -

தமிழில் போதிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கன்னடத்தில் ரொம்ப பேமஸ். இவர் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக தர்ஷனின் மனைவி கன்னட திரைப்பட சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அந்த விஷயம் கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், தர்ஷன் மனைவி அளித்த புகாரின் பேரில் இவர் மீது கன்னட சினிமா சங்கம் நடவடிக்கையை எடுத்தது. இதனால் நிகிதாவிற்க்கு கன்னட திரைப்பட சங்கம் கடந்த 2011ஆம் ஆண்டு 3 ஆண்டுகள் தடை விதித்தது.

இருப்பினும் தெலுங்கு, மலையாளம் தமிழில் மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததாலும், முன்னணி நடிகையாக வளம் வர முடியாததாலும் நிகீதா கடந்த 2017 ஆம் ஆண்டு ககன்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில காலமாக பொது நிகழ்ச்சிகளில் தலை காண்பிக்காமல் இருந்த நிகிதா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு உடல் தெரியும்படி மெல்லிய டிரான்ஸ்பரண்ட் ஆடையில் சென்றிருந்தார். அப்போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement