டிராக்கில் இருந்த ஆயில், டயர் சறுக்கி நிலை தடுமாறிய நிவேதா பெத்துராஜ் (எல்லாரும் அஜித் ஆகிட முடியுமா)

0
2080
nivetha
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சினிமாவையும் தாண்டி இவருக்கு பைக், ரேஸ் கார் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். மேலும், இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கூட கலந்து கொண்டு இருக்கிறார். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும்.

-விளம்பரம்-

அஜித்தை ரோல் மாடலாக வைத்து பல நடிகர் நடிகைகள் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஓட்ட ஆசைபட்டு கூட இருக்கின்றனர். ஆனால், நடிகைகளை பொறுத்த வரை பொதுவாக ஸ்போர்ட்ஸ் பைக்கை ஒட்டி தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், முதல் முறையாக அஜித்துக்கு பின் பார்முலா ரேஸ் காரை ஓட்டிய பெருமையை பெற்று இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

இதையும் பாருங்க : டிஸ்சார்ஜ் ஆகிட்டேன் ஆனா, வீட்டுக்கு போல – விபத்தில் இருந்து பிழைத்த யாஷிகாவின் முதல் போன் கால்

- Advertisement -

பார்முலா ரேஸ் காரை பார்முலா ட்ராக்கில் ஒட்டி பழகிய வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்து இருந்தார். அதே போல சமீபத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த நிவேதா பேத்ராஜிடம், எவ்வளவு வேகத்தில் கார் ஓடுவீர்கள் என்று கேட்டதர்க்கு ஆன் டிராக்கில் 180 போய்இருக்கேன். ஆப் டிராக்கில் 264 கி மீ வேகத்தில் போய் இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பார்முலா 1 டிராக்கில் கார் ஓட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நிவேதா. அந்த வீடியோவில் நன்றாக சென்று கொண்டு இருந்த நிவேதா பெத்துராஜின் கார், திடீரென்று வழுக்கி ஒரு ரவுண்டு அடித்துள்ளது. நல்ல வேலையாக அவருக்கு பின்னால் வந்த கார் அவரை மோதவில்லை. டிராக்கில் ஆயில் சிந்தி இருந்ததால் டயர் வழுக்கி சறுக்கியதாக நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement