என்ன ஆச்சி நிவேதா தாமஸ்ஸுக்கு – ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

0
320
- Advertisement -

பிரபல நடிகை நிவேதா தாமஸ்ஸின் லேட்டஸ்ட் புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் பலரும் வாயை பிளந்து இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு நடிகைகள் தற்போது கதாநாயகிகளாக கலக்கி கொண்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடர் மைடியர் பூதம். இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இருப்பவர் நிவேதா தாமஸ். அதன் பின்னர் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், உலக நாயகன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்ட பட்டது. அதன் பின்னர் ஜெய் நடிப்பில் வெளியான ‘நவீன சரஸ்வதி சபதம் ‘ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படம் சுமாரான வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த படத்திற்கு பின்னர் தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

குழந்தை நட்சத்திரம் To ஹீரோயின் :

இருப்பினும் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடிக்க அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் தெலுங்கில் உள்ள ஒரு சில இளம் நடிகர்களுடன் நடித்து விட்டார். நடிகை நிவேதா தாமஸ் தளபதி விஜயுடன் ஜில்லா படத்தில் நடித்து இருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். மேலும, நடிகை நிவேதா தாமஸ் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதே விஜய் படத்தில் தான்.

தெலுங்கில் அடுத்தடுத்து வாய்ப்பு :

நடிகை நிவேதா தாமஸ், ஜில்லா படத்திற்கு முன்பாகவே விஜய்க்கு தங்கையாக ‘குருவி’ படத்தில் நடித்திருக்கிறார் என்பது பலரும் அறியாத ஒன்று. என்னதான் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது நாயகியாக பல படங்களில் நடித்து வந்தாலும் இவரால் முன்னணி நடிகையாக திகழ முடியவில்லை அதற்கு முக்கிய காரணமே இவரது குள்ளமான உயரம் தான் என்றும் கூறப்படுகிறது இறுதியாக இவர் தெலுங்கில் வக்கீல் ஷாப் படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

ஷாகினி டாகினி :

இந்த படம் தமிழில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அனன்யா நாகலா அஞ்சலி ஸ்ருதிஹாசன் பிரகாஷ்ராஜ் என்று பலர் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இவர் தெலுங்கில் ஷாகினி டாகினி என்ற ஆப்ஷன் காமெடி படத்தில் நடித்திருக்கிறார்.

லேட்டஸ்ட் வீடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள் :

இந்த படத்தில் இவரும் ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர் .இப்படி ஒரு நிலையில் நிவேதா தாமஸ் மற்றும் ரெஜினா இருவரும் தெலுங்கில் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர். அந்த நிகழ்ச்சியில் ப்ரோமோ ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் அவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குண்டாகி போன அவரை பார்த்து, ‘அட நம்ம நிவேதா தாமசா இது?’ என்று பெருமூச்சு விடுகிறார்கள். ஒருவேளை ஏதாவது புதிய படத்துக்காக உடல் எடை கூடியிருக்கிறாரா? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நிவேதா தாமஸ் எதற்காக இப்படி குண்டாக மாறி போயிருக்கிறார்? என்பது குறித்து பெரிய விவாதமே நடந்து வருகிறது.

Advertisement