தமிழில் இழுத்து போத்தி நடித்த நிவேதாவா தெலுங்கில் இப்படி – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.

0
53118
nivetha
- Advertisement -

குழந்தை நட்சத்திரமாக இருந்த பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர்களாக விளங்கி வருகின்றனர். அந்த வகையில் நிவேதா தாமஸும் ஒருவர். சன் தொலைக்காட்சியில் கடந்த 2000ம் ஆண்டு ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடர் மைடியர் பூதம். இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இருப்பவர் நிவேதா தாமஸ்.

-விளம்பரம்-

அதன் பின்னர் விஜயின் குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார். ஜில்லா படத்தில் மீண்டும் விஜய்க்கு தங்கையாக நடித்தார். மேலும், உலக நாயகன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்ட பட்டது. அதன் பின்னர் ஜெய் நடிப்பில் வெளியான ‘நவீன சரஸ்வதி சபதம் ‘ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

- Advertisement -

அந்த படம் சுமாரான வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த படத்திற்கு பின்னர் தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடிக்க அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. இறுதியாக தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘தர்பார்’ படத்தில் ரஜினியின் மகளாக நடித்து இருந்தார்.

தமிழில் ஹீரோயினாக பெரிதாக ஜொலிக்க முடியவில்லை என்றாலும் தெலுங்கில் அம்மணி படு பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் நானியுடன் ‘வி’ என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகர் நானி முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் ‘V’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தில் இருந்து நிவேதா தாமஸ்ஸின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அம்மணி கொஞ்சம் கவர்ச்சியாக நடித்துள்ளார் என்பது தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement