ஓ ரசிக்கும் சீமானே முதல் அம்மா என்றழைக்காத வரை – 1000 படங்களுக்கு மேல் நடித்த நடிகை. நினைவுகளில் அவரின் நினைவுகள்.

0
414
- Advertisement -

பழம்பெரும் நடிகை பண்டரிபாயின் 21 வது நினைவு தினத்தில் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் பந்தல் கிராமத்தில் பிறந்தவர் பண்டரிபாய். இவருடைய தந்தை ஓவியா ஆசிரியர் ரங்கா ராவ். தன்னுடைய 14 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார் பண்டரிபாய். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இப்படி புகழ்பெற்ற நடிகையாக இருந்த பண்டரிபாய் உடைய 21 வது நினைவு தினம் இன்று. இந்நிலையில் இவரை குறித்து பலரும் அறியாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். பண்டரி பாயின் தந்தை ஆசிரியராகப் பணியாற்றியிருந்தவர். ஆனால், இவருக்கு சிறு வயதில் இருந்தே கலையின் மீது அதிக ஆர்வம் என்பதால் தன்னுடைய ஆசிரியர் பணியை விட்டு நாடக கம்பெனி ஒன்றை நடத்தி வந்திருந்தார்.

- Advertisement -

அதோடு தன்னுடைய மகள்கள் எல்லாம் நாடகங்களில் நடிக்க கூடாது என்பதிலும் அவர் தீவிரமாக இருந்தார். இருந்தாலும் பண்டரிபாய் தன்னுடைய 10 வயதிலேயே சிறப்பாக மராத்தி மற்றும் கன்னடத்தில் கதாகலாட்சேபம் செய்யும் திறனைப் பெற்றார். பண்டரி பாயின் திறமையை பார்த்து அவருடைய அண்ணன் கன்னட படம் ஒன்றில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தார். பின் தமிழில் தியாகராஜ பாகவதர் நடித்த சூப்பர் ஹிட் ஆன ஹரிதாஸ் படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

பண்டரிபாய் குறித்த தகவல்:

இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதற்குப்பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் பண்டரிபாய். மேலும், ஆரம்பத்தில் இவர் சிறுசிறு கதாபாத்திரங்கள் நடித்தாலும் இவருடைய நடிப்பு திறமையை பார்த்து இவருக்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

-விளம்பரம்-

பண்டரிபாய் நடித்த படங்கள்:

இன்னொரு பக்கம் இவருக்கு தமிழ் பேசவில்லை என்றாலும் அழகாக சகஸ்ரநாமம் தமிழ் கற்று வசனங்களை பேச பழகினார். அதற்குப் பிறகு இனிமையாகவும், நேர்த்தியாகவும் தமிழ் மொழிகளை பேச ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து இவர் தங்கை, மனைவி, அக்கா, தாய் போன்ற பல வேடங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். எந்த கதாபாத்திரனாலும் ஏற்று நடிக்க கூடிய திறமை கொண்டவர் பண்டரி பாய். மேலும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த மன்னன் படத்தில் இவர் ரஜினி அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பண்டரிபாய் நினைவு தினம்:

இப்படி இருக்கும் நிலையில் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் சிக்கி தன்னுடைய கை ஒன்றை இழந்தார் பண்டரிபாய். அதற்குப் பிறகு இவர் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். பின் உடல்நிலை குறைவு காரணமாக 2003 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி பண்டரிபாய் இறந்தார். இன்று இவருடைய 21 நினைவு தினம். இன்றோடு அவர் இந்த உலகை விட்டு பிரிந்து 21 வருடங்கள் ஆகிவிட்டது. இவர் இல்லை என்றாலும் இவருடைய கதாபாத்திரம் என்றென்றும் மக்கள் மத்தியில் நிலைத்துக் கொண்டுதான் இருக்கிறது. பலரும் பண்டரிபாய் நினைவு தினத்திற்கு தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

Advertisement