காதலருடன் நீச்சல் குளத்தில் குளித்த போஸை போட்டு இளசுகளை க்ளோஸ் செய்த பூனம் பாஜ்வா.

0
1740
Poonam
- Advertisement -

நடிகை பூனம் பாஜ்வா, 1989ஆம் ஆண்டு ஒரு பஞ்சாபி குடும்பத்தில் மும்பையில் பிறந்தார். இவருடைய அப்பா அமர்ஜீத் சிங் ஒரு கடற்படை அதிகாரி. இவருக்கு தயா என்ற தங்கை இருக்கிறார். பூனம் பாஜ்வா தனது பள்ளி காலம் முதலே மாடலிங் செய்து வருகிறார்.12ஆம் வகுப்பு படிக்கும் போதே பார் டைமில் மாடலிங் செய்து வெப்த இவர், 2005ல் மிஸ் புனே பட்டம் வென்றார். அதன்பின்னர் ஒரு ராம்ப்வாக் பேஷன் ஷோவில் இவரது பெர்பாமன்ஸ் பார்த்துவிட்டு தெலுங்கு இயக்குனர் ஒருவர் இவரை படத்தில் நடிக்க வைத்தார்.

-விளம்பரம்-

2005 ஆம் ஆண்டு மொடாட்டி சினிமா ‘ஏமாற’ தெலுங்கு படத்தில் தனது 16 வயதில் 12ஆம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம் ஆனார். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தார். தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இறுதியாக இவர் தமிழ் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை 2’ மற்றும் முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. இறுதியாக தெலுங்கில் வெளியான என் டி ஆர் படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

சமீப காலமாக இவரை படங்களில் காண முடியவில்லை என்றாலும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதுவும் சமீப காலமாக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அம்மணி, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பூனம் பஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து அவரின் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது முதல்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆம் சுனில் ரெட்டி என்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்ததுடன், அவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இது நாள் வரை பூனம் பாஜ்வாவை சிங்கிள் என்று நினைத்து வந்த ரசிகர்கள் பலரும் இந்த பதிவால் தற்போது ஷாக் ஆகி உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement