நடிகைகளின் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறி வரும் மாலத்தீவு கடலில் நீச்சல் உடையில் குளியல் போட்ட பிரனீதா – வைரலாகும் வீடியோ.

0
1142
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை அழகாக இருக்கும் பல்வேறு நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் சரியாக அமைவதில்லை. அந்த வகையில் பிரனீதா சுபாஷ்ஷும் ஒருவர். தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரனீதா சுபாஷ். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தின் மூலம் ரசிகர்களை பரிச்சயமானார். மேலும், சூர்யா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மாஸ் படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அழகான தோற்றம் இருந்த போதும் கார்த்தி மற்றும் சூர்யாவை தவிர இவருக்கு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினிகணேசனும் சூரிலிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார். தமிழில் வாய்ப்பு இல்லை என்றாலும் தற்போது கன்னடம், தெலுங்கு போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பிரணிதா சுபாஷ். அதே போல அம்மணி தெலுங்கில் படு தாராளமாக நடித்து வருகிறார்.

- Advertisement -

தமிழில் பட வாய்ப்புகள் தற்போது அம்மணிக்கு சுத்தமாக இல்லை. இருப்பினும் தற்போது கன்னடத்தில் ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்ல தற்போது ஹிந்தியில் வெளியாக இருக்கும் புஜ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். பாலிவுட்டில் அறிமுகமானால் சொல்லவா வேண்டும் அதற்கு கண்டிப்பாக உடல் அமைப்பை சரியாக வைத்துக்கொள்ள அம்மணி கடுமையான உடற் பயிற்சிகளையும் யோகா சனங்களையும் செய்து வருகிறார்.

இந்தியில் அறிமுகமாக இருப்பதால் அம்மணி அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே தென்னிந்திய நடிகைகள் பலரும் மாலத்தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்று வருகிறார்கள்.மேலும் அங்கே நீச்சலுடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் பரிதாபம் மாலத்தீவு கடலில் நீச்சல் உடையில் குறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்திருக்கிறார் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement