படு ஒல்லியாக மாறிய சூர்யா பட நடிகை..! இப்படி மாறிட்டாங்க! புகைப்படம் உள்ளே..!

0
1800
actress-pranitha

பாலிவுடில் தான் நடிகைகளை ஒல்லி பெல்லி மோகம் ஆட்டிப்படைக்கிறது என்றால். தென்னிந்திய சினிமா நடிகைகளும் ஒல்லியான தோற்றத்தில் இருப்பதே அழகு என்று நம்பிவருக்கின்றனர். அதுவும் ஒல்லியாக இருக்கும் நடிகைகள் சிலர் மேலும் தங்களின் உடல் எடையை குறைத்து ஸிரோ ஹிப்பை வைக்க ஆசைப்படுகின்றனர்.

அந்த வகையில் தமிழில் ‘உதயன்,சகுனி ,மாஸ் ‘ போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். பெங்களூரை பூர்விகமாக கொண்ட இவர் 2010 ஆம் கன்னட மொழியில் வெளியான ‘பொற்கி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் 2011 ஆம் தமிழில் வெளியான ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால் இவர் 2012 இல் கார்த்திக் நடிப்பில் வெளியியான ‘சகுனி’ படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமானர். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி படங்களில் கதாநாயகியாக வலம் வந்தார். இவர் இறுதியாக கடந்த ஆண்டு வெளியான ‘ஜெமினி கணேசனும் சுரலி ராஜனும்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

நடிகை பிரணிதா சுபாஷ் இயற்கையாகவே ஒல்லியான தோற்றத்தை கொண்டுள்ளவர். ஆனால் தற்போது ஒல்லியாக இருக்கும் தனது உடலை மேலும் எடை குறைத்து ஒல்லி பெல்லி தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இவரை இந்த கோலத்தில் ரசிகர்கள் இவர்களை பார்க்கும் போது, இதற்கு மேலயும் உடல் எடையை குறைத்து என்ன செய்ய போகிறீர்கள் என்று நினைகத்தான் செய்வார்கள் அல்லவா.