மலையாள இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பல்டி. இந்த படம் முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் கதையை மையமாக வைத்து எடுத்து இருக்கிறார்கள். இந்த படத்தின் ஹீரோ
சேன் நிகாம். இது இவருடைய 25 வது படம். இந்த படம் தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சாந்தனு, செல்வராகவன், ப்ரீத்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் பேசிய இயக்குனர் உன்னி சிவலிங்கம், இது என்னுடைய முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு. பாலகாடு தான் என்னுடைய சொந்த ஊர். இந்த படத்தில் 60% மலையாளம், 40 சதவீதம் தமிழ் இருக்கும்.
பல்டி படம்:
ஆக்சன் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது விளையாட்டு தளமாக இருந்தால் ஆர்வமாக இருக்கும் என்று விளையாட்டை மையப்படுத்தி இயக்கியிருக்கிறேன். கட்சி சேரா ஆல்பத்தை பார்த்து தான் நான் சாய் அபயங்கரை இந்த படத்திற்கு தேர்வு செய்தேன். இன்றுவரை எனக்கு அவர் பக்கபலமாக இருக்கிறார். நடிகர் ஷேன் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார். சாந்தனு அண்ணாவிடம் கதை சொன்னேன். அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அவருடன் பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது.

இயக்குனர் பேட்டி:
ஹீரோயினி ப்ரீத்தி இடம் அயோத்தி படம் போல் அழுது கொண்டே இருக்க வேண்டாம். வசனம் பேசணும் என்று சொன்னேன். இந்த படத்திற்காக நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். உடனே நடிகை ப்ரீத்தி அஷ்ரானி, என்னுடைய முதல் படமான அயோத்திலிருந்தே உங்களுடைய ஆதரவு எனக்கு கிடைத்திருக்கிறது. விளையாட்டில் இதுதான் எனக்கு முதல் படம். தமிழ் படமும் சென்னையும் தான் என்னுடைய தாய் வீடு போன்ற உணர்வு வரும்.
https://www.youtube.com/watch?v=ppNdxCtdftY
ப்ரீத்தி சொன்னது:
தயாரிப்பாளர் இறுக்கமாக இல்லாமல் எல்லோருக்குமே ஆதரவாக இருந்தார். உன்னி சேட்டா இயக்குனர் என்பதை விட இந்த படத்தின் மூலம் எனக்கு அண்ணா ஆகிவிட்டார். இதற்கு முன்பு நான் நடித்த படங்களை விட இந்த படம் எனக்கு புத்துணர்ச்சியோடும் வித்தியாசமாகவும் இருக்கு. செல்வராகவன் சார், பூர்ணிமா மேடம் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். முதல் படம் எப்போதுமே ஸ்பெஷல் ஆக இருக்கும். அதே போல தான் இந்த படமும் எனக்கு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.






