கர்ப்பமாக இருக்கிறாரா ப்ரியா மணி.! சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்.!

0
1414
Priyamani
- Advertisement -

கார்த்திக் அறிமுகமான ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது வாங்கிய பிரியா மணி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வந்தார். பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

-விளம்பரம்-

இதற்கிடையே, பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, தொழிலதிபர் முஸ்தபா ராஜு என்பவருடன் பிரியா மணிக்கு நட்பு மலர்ந்தது. நாளடைவில் நட்பு காதலாக மாறி, நீண்ட ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக சுற்றி திரிந்தவர்கள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம்  செய்துகொண்டனர்.

- Advertisement -

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ள பிரியா மணி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் ‘ நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்றார். ஆனால், பின்னர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

நீண்ட நாட்களாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருந்த பிரியாமணி தற்போது மீண்டும் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவரை கண்ட அனைவருமே அதிர்ந்து போகினர்.அதற்கு காரணம் உடல் எடை கூடி குண்டாக மாறி இருந்தார் பிரியாமணி. மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் என்றும் கூறப்படுகிறது அதனை உறுதி செய்வது போல தான் இந்த புகைப்படமும் இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement