சினிமாவில் சில பேர் இப்படி தான்- தனுஷ் குறித்து ராதிகா பதிவிட்ட டீவ்ட்

0
1642
- Advertisement -

நடிகர் தனுசை புகழ்ந்து ராதிகா சரத்குமார் பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80, 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் ராதிகா . இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் தொடங்கி தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார். அதோடு ராதிகா ராடான் டிவி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சீரியல்களை தயாரித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி, செல்வி, அரசி, சித்தி என பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ராதிகாவின் சித்தி 2 சீரியல் வெற்றிகரமாக முடிவடைந்தது.

- Advertisement -

ராதிகா திரைப்பயணம்:

இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். வெள்ளித்திரையில் சாதித்தவர்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் நடிகை ராதிகா சரத்குமார். அதுமட்டுமில்லாமல் இவர் ரடான் மீடியா ஒர்க்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் ராதிகாவின் தயாரிப்பு மூலம் விஜய் டிவியில் “கிழக்கு வாசல்” என்ற சீரியல் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த சீரியல் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

ராதிகா நடிக்கும் படம்:

மேலும், இந்த சீரியலில் நடிகர் விசு கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட எஸ்.ஏ சந்திரசேகர் நடிக்கிறார். தற்போது இவர் படங்களில் பிஸியாகவும் நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் நடிகை ராதிகா தற்போது இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2ல் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, மகிமா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ராதிகா புது வீடு:

இந்த படம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு திரையரங்களில் வெளியாகயிருக்கிறது. இதனை அடுத்தும் சில படங்களில் ராதிகா கமிட்டாகி இருக்கிறார். இப்படி இவர் சீரியல், சினிமா, தயாரிப்பு என்று சினிமா துறையில் நுழைந்து கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் புது வீடு ஒன்று கட்டி இருக்கிறார். சமீபத்தில் தான் புது வீட்டிற்கு கிரக பிரவேசம் செய்து குடி பெயர்ந்திருந்தார்கள். இதற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலருமே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் தனுஷும் ராதிகாவின் வீட்டிற்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

ராதிகா பதிவு:

அப்போது தனுஷ் உடன் எடுத்த புகைப்படத்தை ராதிகா தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து, சினிமா துறையில் சிலர்தான் இப்படி சிறப்பான உறவுடன் பழகுவார்கள். இதில் தனுஷும் ஒருவர் என்று கூறியிருக்கிறார். மேலும், தனுசுவிற்கு அம்மாவாக நடிகை ராதிகா தங்கமகன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனுஷ் அவர்கள் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதனை அடுத்து தனுசு இயக்கி நடிக்கும் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

Advertisement