தனது முதல் படத்தின் முதல் நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த ராதிகா. எப்படி இருந்துள்ளார் பாருங்க.

By Rajkumar · 24/4/2021

தமிழ் சினிமாவில் 80, 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ராதிகா . இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்குறார். சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார் ராதிகா. நடிகை ராதிகா அவர்களின் முதல் கணவர் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப். இவரை 1985 ஆம் ஆண்டு ராதிகா திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன ஒரே ஆண்டில் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

அதன் பின்னர் ராதிகா லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ரேயான் என்ற மகளும் பிறந்தார். பின் ராதிகா அவர்கள் ரிச்சர்ட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். பிறகு தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கும் நடிகர் சரத்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும், நடிகர் சரத்குமாருக்கு ஏற்கனவே முதல் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றார்.

இதையும் பாருங்க : சலுகைக்காக மாலத்தீவுக்கு படையெடுத்து நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிடும் நடிகைகள் - சுருதி ஹாசன் சாடல்.

ராதிகா இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ராதிகா பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் என்பது தெரியும். ஆனால், இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில், 1978 ஆம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் தான். இந்த படத்தில் சுதாகர், கௌண்டமணி, காந்திமதி என்று பலர் நடித்து இருந்தனர்.

https://twitter.com/realradikaa/status/1385869199520583680

இந்த படத்தில் இடம்பெற்ற 'பூவரசம் பூ' என்ற ஒற்றை பாடலுடன் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் ராதிகா. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் எடுத்த தன்னுடைய புகைப்படங்களை நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full