சலுகைக்காக மாலத்தீவுக்கு படையெடுத்து நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிடும் நடிகைகள் – சுருதி ஹாசன் சாடல்.

0
1200
sruthi
- Advertisement -

நடிகைகளை பொறுத்த வரை தங்களது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வருவது வழக்கம். அந்த வகையில் சமீப காலமாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளாக திகழ்ந்து வந்த வேதிகா, டாப்ஸி, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று அங்கே எடுக்கப்பட்ட கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். அதே போல புதிதாக திருமணமான காஜல் அகர்வாலும் தேனிலவுக்கு மாலத்தீவுக்கு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சரி, இது என்ன புதிய விஷயமாக என்று கேட்டால். கொரோனா லாக் டவுனுக்கு பின் தான் நடிகைகள் பலரும் மலத்தீவு சென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா நடிகைகளை போல சின்னத்திரை பிரபலன்களான ஆல்யா மானஸா, டிடி, ரைசா, ஷிவானி என்று பலர் லாக் டவுனுக்கு பின்னர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : விஜய் டிவி ஜோடியில் ஆடிய ப்ரியாவை ஞாபகம் இருக்கா ? குழந்தை குட்டினு எப்படி ஆகிட்டாங்க.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் மாலத்தீவுகளில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் நடிகைகளை இல்வசமாக அந்த தீவுக்கு வரவழைத்து அவர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றை இலவசமாக அளிப்பது. அப்படி வரும் நடிகைகளுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளில் ஒன்று நிறைய புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் பகிரவேண்டும் என்பதாம்.

இந்த காரணத்துக்காகதான் நடிகைகள் மாலத்தீவுக்கு இப்போது படையெடுக்க ஆரம்பித்துள்ளனராம். அதிலும் லாக்டவுனுக்கு பின் மாலத்தீவில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் தான் இந்த சலுகையை வழங்கி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் திரை நட்சத்திரங்கள் பொழுதுபோக்கிற்காக மாலத்தீவுக்கு சென்று, புகைப்படங்களை வெளியிட்டு வருவதற்கு நடிகை ஸ்ருதி ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Here are all the pictures from Samantha's dreamy vacation in Maldives!

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா விழிப்புணர்வு குறித்த அச்சம் தனக்கு அதிகம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நேரத்தில் பிரபலங்கள் பலரும் மாலத்தீவு உள்ளிட்ட பொழுது போக்கு இடங்களில் முக கவசம் அணியாமல் உல்லாசமாகவும், நீச்சல் குளங்களில் குளித்துக்கொண்டும் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வருத்தம் தருவதாக ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement