சைவத்திற்கு மாறிய ரகுல் ப்ரீத் சிங். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட இதை எடுத்துட்டு போய் சாப்பிடுவாராம்.

By Rajkumar · 19/2/2020

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் ராகுல் பிரீத் சிங். இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம், இந்தி போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் தன்னுடைய 18 வயதிலேயே மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதற்குப் பின்னர் சினிமாத் துறையில் படங்களில் நடிக்க தொடங்கினார். முதலில் இவர் ரீமேக் படங்களில் தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் முன்னணி நடிகர்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தது.

மேலும், நடிகை ரகுல் பிரித் சிங் ‘தடையறத் தாக்க’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் தீரன், ஸ்பைடர்,தேவ், என்.ஜி.கே போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் அவர்கள் சைவத்திற்கு மாறி இருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். தன் வாழ்வில் எடுத்திலேயே இது தான் சிறந்த முடிவு. நான் ஒரு தீவிரமான அசைவ விரும்பி. எனக்கு காய்கறிகள் சாப்பிடுவது பிடிக்காமல் இருந்தது. என்னுடைய வாழ்வில் இறைச்சி ஒரு முக்கியமாக இருந்தது. குறிப்பாக முட்டை சொல்லலாம். இருந்தாலும் நான் முற்றிலும் சைவ உணவிற்கு மாற முடிவு செய்தேன். இது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவல்ல. இப்போது நான் உடல் எடை குறைந்தும், ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் இருப்பதாக உணருகிறேன்.

இதையும் பாருங்க : அந்த படத்தை என்னை இயக்க சொன்னார் விஜய். பார்த்திபன் சொன்ன சீக்ரெட்.

ஷூட்டிங்காக நான் பல இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் எல்லா இடங்களிலும் சைவ உணவு கிடைக்கிறதா? என்பது கேள்வி தான். அதனால் தான் நான் வீட்டில் இருந்தே காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதற்கு எடுத்துச் செல்வேன்.மேலும், மும்பையில் நடக்கும் படப்பிடிப்பிற்கு வீட்டில் இருந்தே நான் பழங்களை எடுத்துச் செல்கிறேன். அதே சமயம் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பு செல்லும் போதும் அரிசியுடன் காய்கறி, பருப்பு கலந்து சமைக்கிறார்கள்.

அதில் சுவைக்காக சைவ நெய்யை கலந்து சாப்பிடுகிறேன் என்றும் கூறி உள்ளார். தற்போது ராகுல் பிரீத் சிங் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்திலும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவர்கள் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஹிந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full