அந்த படத்தை என்னை இயக்க சொன்னார் விஜய். பார்த்திபன் சொன்ன சீக்ரெட்.

0
15903
Parthiban-Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் சினிமா உலகில் நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு பாதையும், முத்திரையும் உருவாக்கியவர். இவர் நடிப்பில் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் “ஒத்த செருப்பு சைஸ் 7”.

-விளம்பரம்-

இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும், இந்த படத்தை பார்த்திபன் அவர்களே தயாரித்தும், இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் ஒன் மேன் ஆர்மி போல நடித்து இருக்கிறார். இந்த படம் முழுவதும் அவர் மட்டுமே வருவார். அதாவது வேறு எந்த ஒரு நபரின் முகமோ,உருவமோ தெரியாது. இதுவரை தமிழ் சினிமா உலகில் கொண்டு வராத புது முயற்சியை பார்த்திபன் செய்து உள்ளார். இந்நிலையில் விஜய் நடித்த நண்பன் படத்தை முதலில் பார்த்திபன் அவர்கள் இயக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நண்பன். இந்த திரைப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

- Advertisement -

இத்திரைப்படம் 3 இடியட்ஸ் என்ற ஹிந்தி படத்தின் தழுவல். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில் பார்த்திபன் அவர்கள் நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தை முதன் முதலாக இயக்க இருந்ததாக அவரே கூறியுள்ளார். பொதுவாகவே நடிகர் பார்த்திபன் அவர்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். திடீரென்று ரசிகர் ஒருவர் நீங்களும் விஜய்யும் இணைந்தால் வேற லெவல் மாஸாக இருக்கும் என்று கூறியிருந்தார். இதற்கு பார்த்திபன் அவர்கள் கூறிய பதில், மாசுக்கு மாஸ்டரை பிடிக்கும். மாஸ்டருக்கு இந்த நண்பனை பிடிக்கும். அதாவது நண்பன் படத்தை என்னைத் தான் முதலில் இயக்க சொன்னார் அழகிய தமிழ் மகன்.

நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்! என்று கூறி இருந்தார். மாஸ்டர் படம் வெளிவருவதற்கு முன்பாகவே தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் என்ற பல தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தளபதி 65 படம் குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் பார்த்திபன் பதிவிட்ட கருத்தை பார்க்கும் போது ஒருவேளை இந்த தளபதி 65 படத்தை இயக்கப்போவது பார்த்திபன் ஆக இருக்குமா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement