நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன் – இப்படி எல்லாம் கூடவா போஸ் கொடுத்திருக்காரு.

0
2694
Ramya-Krishnan

40ஐ கடந்தாலும் இளமை மாறாமல் இருக்கும் நடிகைகளில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன், 1970 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தனது 14 வயதில் ‘பலே மித்ருலு ‘ என்ற தெலுகு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமானார். இதுவரை 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஒரு புகழ் பெற்ற நடிகை.

தெலுங்கில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை ரம்யாகிருஷ்னன், தமிழில் அறிமுகமான படம் 1983 ஆம் ‘வெள்ளை மனசு’ என்ற படத்தில் தான். அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டு ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த நடித்த ‘கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ வந்த ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

- Advertisement -

அதன் பின்னர் தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பன்மொழி படஙகளில் நடித்து வந்தார் ரம்யாகிருஷ்னன். ஆனால், பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவர்க்கு அமையவில்லை. இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 1999 ஆம் சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா தான். அந்த படத்திற்கு பின்னர் இவரது மார்க்கெட் எகிறியது. அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வந்த நடிகை ரம்யாகிருஷ்ணன் தனது 33 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார்.

தெலுங்கில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்தார்.கடந்த ஆண்டு ஒளிபரப்பான தெலுங்கு பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் ஒருநாள் தொகுப்பாளராகவும் கலந்து கொண்டார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இப்படி ஒரு நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நீச்சல் உடைகளில் எடுத்துக்கொண்ட சில Throwback புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement