அடேங்கப்பா, ராஜா மாதா ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்ளோ பெரிய மகனா ? இதோ புகைப்படம்.

0
1348
ramya
- Advertisement -

தமிழ் சினிமாவில் 40ஐ கடந்தாலும் இளமை மாறாமல் இருக்கும் நடிகைகளில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன், 1970 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தனது 14 வயதில் ‘பலே மித்ருலு ‘ என்ற தெலுகு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமானார். இதுவரை 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஒரு புகழ் பெற்ற நடிகை. தெலுங்கில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை ரம்யாகிருஷ்னன், தமிழில் அறிமுகமான படம் 1983 ஆம் ‘வெள்ளை மனசு’ என்ற படத்தில் தான்.

-விளம்பரம்-

இரண்டாம் படமே ரஜினியுடன் :

அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டு ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த நடித்த ‘கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ வந்த ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதன் பின்னர் தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பன்மொழி படஙகளில் நடித்து வந்தார் ரம்யாகிருஷ்னன்.

- Advertisement -

தூக்கிவிட்ட படையப்பா :

ஆனால், பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவர்க்கு அமையவில்லை. இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 1999 ஆம் சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா தான். அந்த படத்திற்கு பின்னர் இவரது மார்க்கெட் எகிறியது. தற்போது வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.நடிகர்கள் ஒரு சில பேர் சின்னத்திரைக்கு வந்துவிட்டால் வெள்ளி திரையில் மவுசு குறைந்து விடும்.

33 வயதில் திருமணம் :

This image has an empty alt attribute; its file name is 1-107-1024x1014.jpg

ஆனால், நம்ம ரம்யா கிருஷ்ணன் மட்டும் தான் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து துறைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 1999 ஆம் சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா தான். அந்த படத்திற்கு பின்னர் இவரது மார்க்கெட் எகிறியது. அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வந்த நடிகை ரம்யாகிருஷ்ணன் தனது 33 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

ஒரே ஒரு மகன் :

2003 ஆண்டு கிருஷ்ணா வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். வம்சியும் தெலுங்கில் பிரபலமான ஒரு இயக்குனர் தான. இதுவரை இவர் தெலுங்கில் 20 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ரித்விக் என்ற மகனும் பிறந்தார். அவரது மகனுக்கு தற்போது 17 வயது ஆகிறது. சமீபத்தில் அவரது புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரையிலும் கலக்கும் ராஜ மாதா :

தமிழில் இறுதியாக தேவ் படத்தில் நடித்து இருந்தார் அதை தொடர்ந்து பார்ட்டி, உயர்ந்த மனிதன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதே போல தொடர்ந்து சின்னத்திரை பக்கமும் கலக்கி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான BBஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் இறுதியாக பிக் பாஸில் கமலுக்கு பதிலாக ஒரு வாரம் மட்டும் தொகுத்து வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement