நயன் பணியாற்றிய அதே தொலைக்காட்சியில் வேலை செய்துள்ள பீசா பட நடிகை – இதோ புகைப்படம்.

0
1305
ramya
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயனின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன் என்பது பலரும் அறிந்த ஒன்று.மேலும் , நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக மலையாள தொலைக்காட்சியான கைரலி என்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் நடிகை நயன்தாரா தொகுப்பாளராக பணியாற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா பணியாற்றிய அதே தொலைக்காட்சியில் தமிழ் சினிமாவின் மற்றுமொரு பிரபல நடிகையான ரம்யா நம்பீசன் பணியாற்றியிருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நயன்தாராவை போல கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா நம்பீசன் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பாகவே நயன்தாரா பணியாற்றிய அதே கைரலி என்ற மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஹலோ குட் ஈவினிங்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார் நடிகை ரம்யா நம்பீசன். அதன் பின்னர் சினிமாவில் நடிகையாக விளங்கி வந்த ரம்யா நம்பீசன் தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிக் கூட்டம்,பீட்ஸா, சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார். இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகை ரம்யா நம்பீசன் அவர்கள் புதிதாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி உள்ளார். அதில் பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை பதிவிறக்கம் செய்தும் வருகிறார். தற்போது நடிகை ரம்யா நபீசன், ரியோ ராஜ் கதநாகனாக நடித்து வரும் ‘பிளான் பண்ணி பண்ணனும் ‘ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தினை பத்ரி வெங்கடேஷ் என்பவர் இயக்கவிருக்கிறார் இவர் ஏற்கனவே அதர்வா நடித்த பானா காத்தாடி, செம போதை ஆகாதே போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், ரோபோ ஷங்கர், முனிஸ்காந்த், ஆடுகளம் நரேன் போன்ற பலரும் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னை கொடைக்கானல்சிக்கிம் குஜராத் போன்ற இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement