தென்னிந்தியா சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ரெஜினா. இவர் தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின்னர் இவர் அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருந்தார்.

அதை தொடர்ந்து இவர் ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவருக்கு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் இவர் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார்.
ரெஜினா குறித்த தகவல்:
சமீப காலமாக இவர் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதோடு கடந்த ஆண்டு இவர் அஜித் நடித்த இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த ‘விடா முயற்சி’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இதை அடுத்து இவர் பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரெஜினா பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரெஜினா, எனக்கு இந்தி எழுத படிக்க பேச நன்றாகவே தெரியும். இதுவரை இந்தி மொழியில் நான் நடித்த படங்களுக்கு என்னுடைய சொந்த குரலில் தான் டப்பிங் பேசி இருக்கிறேன். ஆனால், நான் தென்னிந்தியாவிலிருந்து வந்ததால் பாலிவுட்டில் என்னுடைய மொழி, உச்சரிப்பு பின்னணி பற்றி எல்லாம் கிண்டல் செய்து என்னை கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள். சினிமாவில் அனுபவம் வாய்ந்த என்னை ஒரு புது நடிகை போலவே நடத்தினார்கள்.
View this post on Instagram
பாலிவுட் பற்றி சொன்னது:
இந்தி நடிகர்களுடைய கண்டிப்பான நடவடிக்கையை நேர்மை என்று சொல்கிறார்கள். ஆனால், அதே செயலை தென்னிந்திய நடிகர்கள் செய்தால் தலைகனம், திமிர் பிடித்தவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். மும்பையில் பணியாற்றினாலும் என்னுடைய வீடும் இதயமும் தென்னிந்திய சினிமாவிலேயே தான் இருக்கிறது. பாலிவுட்டினால் நான் நிறைய மன உளைச்சல் ஆளாகி இருக்கிறேன். இதனாலே பல பட வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






