விவாகரத்து ஆன பின் பல ஆண்டுகள் கழித்து தாயான ரேவதி – குழப்பத்திற்கு அவரே அளித்த விளக்கம். (தத்து கூட எடுக்கலயாம்)

0
3779
revathi
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. இவருடைய உண்மையான பெயர் ஆஷா. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். நடிகை ரேவதி அவர்கள் 1981 ஆம் ஆண்டு “மண்வாசனை” என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரேவதி அவர்கள் ஹிந்தி, ஆங்கில திரைப் படங்களை கூட இயக்கி உள்ளார். நடிகை ரேவதி அவர்கள் 1988 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-9.jpg

திருமணத்திற்கு பிறகு சில காலம் ரேவதி அவர்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். மேலும், 27 ஆண்டு காலமாக இவர்களுடைய வாழ்க்கையில் குழந்தை எதுவும் இல்லாததனால் தான் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று உள்ளார்கள் என்றும் கூறுகிறார்கள்.பின் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இவர்கள் இருவரும் 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ரேவதி அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த குழந்தைக்கு தற்போது 6 அல்லது 7 வயது இருக்கும். ரேவதி கடந்த 2018 ஆம் ஆண்டு தனக்கு 5 வயது பெண் குழந்தை இருப்பதாக அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 52. அதாவது விவாகரத்துக்கு பின் 47 வயதில் ரேவதி குழந்தையை பெற்று உள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 2-6.jpg

இதுகுறித்து விளக்கமளித்த ரேவதி, என் கல்யாண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு மனதளவில் நொறுங்கி போய் இருந்தேன். பின் என்னுடைய திருமண வாழ்க்கையும் முடிந்து விட்டது. நாங்கள் இருவரும் தனித் தனியாக தான் வாழ்ந்து வருகிறோம். எனக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். அவளுடைய பெயர் மகிஒரு பெண் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள். அதற்காக நான் பல வருடங்களாக ஏங்கி இருக்கிறேன். அதோடு நான் டெஸ்ட் டியூப் வழியாக தான் கருவுற்றேன். பின் நான் பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். ஆனால், அனைவரும் இவளை நான் தத்து எடுத்து பிள்ளை என தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நான் பெற்றெடுத்த குழந்தை அவள்.

-விளம்பரம்-
Advertisement