‘தொடரும் Nepotism’ – சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் ரோஜாவின் மகள். அதுவும் இந்த படத்தில்.

0
451
roja
- Advertisement -

நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த “செம்பருத்தி” என்ற படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு என்று பல நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ரோஜா அரசியல்:

பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார். சில ஆண்டு காலாகவே ரோஜா நடிப்பை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகிறார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஜா குடும்பம்:

ரோஜா தன் ஏரியாபகுதி மக்களுக்கு பம்பரமாக சுற்றி வேலை செய்து வருகிறார். கொரோனா சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு எம் எல் வாக பல உதவிகள் செய்து இருந்தார் ரோஜா. அந்த பகுதி மக்களின் கல்வி, மருத்துவ உதவி என பல விஷயங்களை செய்து அசத்தி இருக்கிறார் ரோஜா. இதனிடையே இவர் கடந்த 2002 ஆம் தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

ரோஜா மகள் குறித்த தகவல்:

இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபலமான கல்லூரியில் நடிப்பு, இயக்கம், எழுதுதல் போன்ற பயிற்சி பெற்று வருகிறார். ஏற்கனவே, இவர் வெப் டெவலப்பர் மற்றும் கண்டெண்ட் ரைட்டர் ஆவார்.

கதாநாயகியாகும் ரோஜா மகள்:

சிறந்த எழுத்தாளராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் எழுதிய “தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்” என்ற புத்தகம் ஜி டவுன் என்ற இதழில் வெளியானது. இதனை அடுத்து தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருது ரோஜாவின் மகளுக்கு சமீபத்தில் கிடைத்து இருந்தது. இதன் மூலம் ரோஜாவின் மகள் கூடிய விரைவில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement