தன் மகனுக்கு சொகுசு காரை வாங்கி தந்த ரோஜா - விலை எத்தனை கோடி தெரியுமா ? (அமைச்சர் ஆனதுல நிறைய சம்பாதிக்கிறாங்களோ )

By Ajju · 15/7/2022

நடிகை ரோஜா தன்னுடைய மகனுக்கு சொகுசு கார் பரிசளித்து இருக்கும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு வெளி வந்து இருந்த “செம்பருத்தி” என்ற படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

அதனை தொடர்ந்து இவர் சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு என்று பல நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பிறகு பிரபுவின் மகள் என்ன செய்கிறார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம் இதோ.

ரோஜா அரசியல்:

பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார். பின் சில ஆண்டு காலாகவே ரோஜா நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு. மேலும், ஜெகன்மோகன் அமைச்சரவையில் ரோஜாவுக்கு இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ரோஜா செய்த உதவிகள்:

ஆனால்,ரோஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருந்தும் ரோஜா அப்பகுதியில் பம்பரமாக சுற்றி பணியாற்றி வருகிறார். கொரோனா சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு எம் எல் வாக பல உதவிகள் செய்து இருந்தார் ரோஜா. அந்த பகுதி மக்களின் கல்வி, மருத்துவ உதவி என பல விஷயங்களை செய்து அசத்தி இருக்கிறார் ரோஜா. இதனிடையே இவர் கடந்த 2002 ஆம் தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரோஜா தன் மகனுக்கு வாங்கிய கொடுத்த கார்:

இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள். மகள் பெயர் அன்ஷு மாலிகா, கௌஷிக் என்ற மகனும் இருக்கின்றனர். சமீபத்தில் தான் ரோஜாவின் மகள் சிறந்த எழுத்தாளருக்கான விருது ஒன்றை வாங்கி இருந்தார். இந்த நிலையில் ரோஜா தன்னுடைய மகனுக்கு விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். அதாவது, ரோஜா தன்னுடைய மகனுக்கு பென்ஸ் கார் ஒன்றை பரிசாக கொடுத்து இருக்கிறார். அந்த பென்ஸ் காரின் விலை ஒன்றரை கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

https://twitter.com/Shaikkhaderal20/status/1546773108475850752

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

மேலும், ரோஜா தன் மகனுக்கு வாங்கி கொடுத்த பரிசு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ரோஜா மீது அதிக விமர்சனம் எழுப்பி வருகின்றனர். அதிலும் சிலர், தான் பணக்காரி இல்லை என சொன்ன ரோஜா இப்போது எப்படி கோடிக்கணக்கில் கொடுத்து கார் வாங்கி கொடுக்கிறார் என்றும், அமைச்சர் ஆகிவிட்ட பின் அதிகம் சம்பாதிக்கிறார் போல என்றெல்லாம் விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு ரோஜா தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full