திருமணத்திற்கு பிறகு பிரபுவின் மகள் என்ன செய்கிறார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம் இதோ.

0
1169
Prabhu
- Advertisement -

நடிகர் பிரபுவின் மகள் திருமணத்திற்கு பிறகு செய்யும் செய்யும் வேலை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நடிகர் திலகமாக என்றென்றும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பவர் சிவாஜி கணேசன். இவருடைய மகன் தான் பிரபு. இவரை அனைவரும் இளைய திலகம் என்று தான் அழைப்பார்கள். இவரும் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருந்தார். இவர் 1982ம் சிவாஜி கணேசனின் சங்கிலி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.

-விளம்பரம்-
Actor Prabhu

அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், பிரபு அவர்கள் தன்னுடைய தந்தை சிவாஜி கணேசன் அளவுக்கு சினிமா உலகில் பெயரும், புகழும் வாங்கவில்லை என்றாலும் சினிமா உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : பிரதாப்பின் மரணத்திற்கான காரணம் என்ன ? காவல் துறை தெரிவித்த தகவல். (மரணம் குறித்து நேற்று அவர் இறுதியாக போட்ட பதிவு இது தான்)

பிரபு நடிக்கும் படம்:

மேலும், இவர் ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். தற்போது இவர் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது.

-விளம்பரம்-

பிரபுவின் குடும்பம்:

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் எல்லாம் வெளியாகி இருந்தது. மேலும், படத்தில் பிரபு மற்றும் அவரது மகன் விக்ரம் பிரபு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதனிடையே நடிகர் பிரபு அவர்கள் புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு என்ற மகன் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி படம் வாயிலாக திரை உலகில் பிரபலமானர்.

பிரபுவின் மகள் ஐஸ்வர்யா திருமணம்:

தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். மேலும், பிரபுவிற்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் பெயர் ஐஸ்வர்யா. இவர் பிகாம் டிகிரியை(B.Com) எத்திராஜ் கல்லூரியில் படித்து இருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, குணால் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடை பெற்றது. நடிகர் பிரபுவின் தங்கை தேன்மொழி மகன் தான் குணால். குணால் அவர்கள் யூகேவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய திருமணம் சென்னையில் உள்ள சிவாஜியின் வீட்டில் சிறப்பாக நடை பெற்றது.

பிரபுவின் மகள் ஐஸ்வர்யா செய்யும் வேலை:

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு பிரபுவின் மகள் ஐஸ்வர்யா கேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் மெல்ட்ஸ் டெசர்ட் (meltz.dessertz) என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். ஆர்டரின் பேரில் கேக் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார். இதற்காக அவர் இன்ஸ்டாகிராம் பக்கம் ஆரம்பித்து இருக்கிறார். அதில் அவர் தான் தயாரித்த விதவிதமான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அவர் தயாரித்த கேக்கின் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். பிறந்தநாள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளாக கேக் தயாரித்து வழங்கி வருகிறார்.

Advertisement