தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் மாவட்டத்தை வெளி வந்து இருந்த “செம்பருத்தி” என்ற படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.அதனை தொடர்ந்து இவர் சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி போன்ற என் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார்.
மேலும், இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு என்று பல நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார்.
பின் சில ஆண்டு காலாகவே ரோஜா பின் நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு. மேலும், ஜெகன்மோகன் அமைச்சரவையில் ரோஜாவுக்கு இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,ரோஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இருந்தும் ரோஜா அப்பகுதியில் பம்பரமாக சுற்றி இருந்தும் வருகிறார். கொரோனா சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு எம் எல் ஏ வாக பல உதவிகள் செய்து இருந்தார் ரோஜா. அந்த பகுதி மக்களின் கல்வி, மருத்துவ உதவி என பல விஷயங்களை செய்து அசத்தி இருக்கிறார் ரோஜா. இதனிடையே இவர் கடந்த 2002 ஆம் தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு திருமணம் மற்றும் மகள் இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ரோஜா செய்தியாளர்களுக்கு கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் கூறியதாவது `நான் சினிமா வந்த காலம் முதல் தற்போது வரை பணியாற்றி வருவது வரை எனக்கு பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சமீப காலங்களில் என்னை பற்றியும் என்னுடைய குடும்பத்தை பற்றியும் தேவையில்லாத அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். உதாரணமாக பிறந்தநாளின் போது என்னுடைய சகோதரர் முத்தமிட்ட போது கூட என்னை அவதூறாக சித்தரித்துள்ளார்.
இந்த நிலையில் என்னையும் என்னுடைய மகளுடைய புகைப்படங்களையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர். இதனை பார்த்த என்னுடைய மகள் இவையெல்லாம் நமக்கு தேவையா என கேட்டு மிகவும் வருத்தப்பட்டாள். அவளுக்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று தெரியவில்லை. பிரபலங்களின் வாழ்க்கையில் இவைவெல்லாம் சாதாரணமானது. இதை நினைத்து நாம் கவலை பட்டாள் நம்மால் முன்னேற முடியாது என்று கூறியதாக நடிகையும் அரசியல் வாதியுமான ரோஜா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.