தயாரிப்பாளராகிறார் நடிகை சதா..! விஜய் பட இயக்குனரா…யார் தெரியுமா ?..பார்த்த ஷாக் ஆகிடுவீங்க..!

0
1627
- Advertisement -

சினிமா நடிகைகள் எல்லோருக்கும் மார்க்கெட் என்பது ஒரு சில வருடங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். அதானல் அவர்கள் கண்டிப்பாக தங்களது வாழ்க்கையை பாதுகாத்து கொள்ள சினிமாவை தவிர்த்து கண்டிப்பாக ஏதோ ஒரு தொழிலை செய்து வருவார்கள். அந்த வரிசையில் விரைவில் தனது நடிப்பில் வெளியாகவுள்ள ஒரு படத்தை தயாரிக்க போகிறராம் நடிகை சதா.

-விளம்பரம்-

Sadha (5)

- Advertisement -

முன்னணி நடிகைகள் என்றால் பரவாயில்லை அவர்கள் தங்கள் நடித்துக் கொண்டிருக்கோம் போதே தங்களது வாழ்க்கைக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்துகொள்வார்கள். ஆனால் தமிழில் 2002 ஜெயம் என்ற படத்தில் சினிமாவில் அறிமுகமான சதா அதற்கு பின்னர் அஜித், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். இறுதியில் எலி என்ற படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாகவும் நடித்து வந்தார்.

இதுவரை தமிழ், தெலுகு, மலையாளம், ஹிந்தி என்று பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்த சதவிற்கு தற்போது தயாரிப்பாளராக ஆக ஆசைவந்துவிட்டதாம். தற்போது புதுமுக இயக்குனர் அப்துல் மஜித் இயக்கும் “டார்ச் லைட்” என்ற புதிய படத்தில் கதாநாயகியாக நடிக போகிறாராம். மேலும் இந்த படத்தில் நடிப்பதோடு இந்த அப்படத்தை தயாரிக்கவும் உள்ளாராம்.

-விளம்பரம்-

majith

மேலும் இந்த படத்தின் இயக்குனர் அப்துல் மஜீத் ஏற்கனவேய விஜய் நடித்த தமிழின் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றிய படமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் முதலில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மட்டும் தான் திட்ட மிட்டிருந்தாராம் சதா. ஆனால் இயக்குனர் மஜித் இந்த படத்தின் கதையை கூறியபோது அதில் மயங்கிய சதா இந்த படத்தை தானே தயாரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளாராம்.

Advertisement